32 ஆண்டுக்கால நட்பு.. சிறந்த வீரருடன் விளையாடினேன்.. பாண்டிங் கண்ணீர்.. மெக்ராத், கில்கிறிஸ்ட் சோகம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே மறைவுக்கு அவருடைய கேப்டன் ரிக்கி பாண்டிங் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் உச்சம் தொட்ட போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் வார்னே தான்.
வார்னேவும், ரிக்கி பாண்டிங்கும் ஒரே கிரிக்கெட் அகாடமியிலிருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு முன்பே வார்னர், பாண்டிங்கும் நண்பர்கள்.

ரிக்கி பாண்டிங்
இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ள பதிவில், 15 வயதிலிருந்தே வார்னேவை எனக்கு தெரியும், கிரிக்கெட் அகாடமியில் தான் முதன் முதலில் சந்தித்தேன். எனக்கு பண்டர் என்ற பட்ட பெயர் வைத்தவரே அவர் தான். பல வருடங்களாக ஒரே அணியில் விளையாடி பல உச்சத்தையும், பல இன்னல்களையும் ஒன்றாக சந்தித்தோம்.

பெருமை
எப்போதும் சக வீரர்களுக்காக துணை நிற்பவர். அவரை எப்போதுமே நீங்கள் நம்பலாம். நமக்கு தேவைப்படும் போது எல்லாம் முதல் ஆளாக வந்து நிற்பவர். சிறந்த கிரிக்கெட் வீரருடன் விளையாடி இருக்கிறேன் என்ற பெருமைப்படுகிறேன். குடும்பத்தை வார்னே மிகவும் நேசித்தார். அவரது குடும்பத்திற்காக இந்த நேரத்தில் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

மெக்ராத்
வார்னேவுடன் விளையாடிய சக வீரரான மெக்ராத் வெளியிட்டுள்ள பதிவில், வார்னேவின் மறைவு மனதை நொறுக்கிவிட்டது. அவருக்கு ஏதும் நடக்காது என்று நம்பிக்கையுடன் இருந்தேன். பல மனிதர்கள் 20 வயதில் வாழ்ந்த வாழ்க்கையைவிட அவர் அதிகமாக வாழ்ந்தார். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த ஜாம்பவான். தோல்வியை ஒப்பு கொள்ளாதவர், எப்படியாவது எங்களை அணியை வெற்றிக்கு கொண்டு வந்துவிடுவார்.
Recommended Video

கில்கிறிஸ்ட்
ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த விஷயமே அவரது பந்துவீச்சுக்கு விக்கெட் கீப்பராக இருந்தது தான். அவருடைய மேஜிக்கை மைதானத்திலேயே சிறந்த இடத்தில் இருந்து பார்த்த பெருமை எனக்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications