Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திட்டம் போட்டு அப்படி பண்ணிய அந்த வீரர்..? ரசிகர்கள் சந்தேகம்..! கையை பிசையும் கிரிக்கெட் வாரியம்

Recommended Video

Ashes 2019 | Archer bouncer to smith | ஸ்மித் காயம்... சிக்கலில் ஆர்ச்சரும், இங்கிலாந்து அணியும்

லண்டன்: ஆர்ச்சரின் மிரட்டல் பந்துவீச்சால் ஸ்மித் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்க, ரசிகர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ குழம்பிக் கிடக்கிறது.

ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கழுத்தில் செமத்தியாக அடி வாங்கிய ஸ்மித் நிலைகுலைந்து கீழே விழுந்து விட்டார். பிறகு வந்து ஆடினார், சதம் எடுக்க முடியாமல் ஆட்டமிழந்து சென்றார்.

இரவில் தூங்கிய அவருக்கு காலையில் லேசான தலைவலி மற்றும் வாந்தியால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடல் சோர்வும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் ஸ்மித் இருந்து வருகிறார். எதிர்வரக் கூடிய மருத்துவ பரிசோதனைகளே அவரது உடல் நலத்தை பற்றி சொல்லும்.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

மருத்துவ கண்காணிப்பு என்பதால் அடுத்த டெஸ்டில் ஸ்மித் விளையாடவில்லை என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். ஏன் எனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் இணைந்த அவர், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து சிம்ம சொப்பனமாக இருந்தார்.

பவுலிங் அட்டாக்

பவுலிங் அட்டாக்

ஆஸ்திரேலிய அணியின் நிலைமை இப்படி இருக்க, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிலைமையோ வேறு மாதிரி இருக்கிறது. ஆர்ச்சரின் இந்த பவுலிங் அட்டாக்கை பற்றி தீவிரமாக யோசித்து வருகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

விதிகள் தளர்வு

விதிகள் தளர்வு

ஆர்ச்சர் அண்மையில் முடிந்த உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் கதாநாயகனாக பார்க்கப்பட்டவர். அவரது பூர்வீகம் இங்கிலாந்து கிடையாது. ஆனாலும் அவரது திறமை, வேகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பார்த்து விதிகளை தளர்த்தி இங்கிலாந்து அணிக்கு கொண்டு வந்தது கிரிக்கெட் வாரியம்.

அறிமுக போட்டி

அறிமுக போட்டி

அதே நேரத்தில் ஒருநாள் போட்டிகளில் தடம்பதித்து வந்த அவர் டெஸ்ட் தொடரில் இப்போது தான் அறிமுகமாகி இருக்கிறார். ஆஷஸ் தொடர் தான் அவருக்கு அறிமுக டெஸ்ட் போட்டி. அந்த தொடரில் தம்மை நிரூபிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் பந்து ஸ்மித்தை படுக்கையில் கொண்டு சேர்த்திருக்கிறது.

கடும் அதிருப்தி

கடும் அதிருப்தி

எனவே, அவரின் பவுலிங்கால் கடும் அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் புகார் வாசித்திருக்கின்றனர். அதிலும் ஸ்மித் கீழே விழுந்த போது அவர் சிரித்துக் கொண்டிருந்தது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வேண்டும் என்றே இது போன்று அச்சுறுத்தும் வகையில் பந்தை வீசினாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். அதற்கு பதில் சொல்லமுடியாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடுமாறி வருகிறது.

ரசிகர்களின் சந்தேகம்

ரசிகர்களின் சந்தேகம்

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் இந்த ஆஷஸ் டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரே வீரர் அவர் மட்டும் தான். அவர் ஆட்டமிழந்த நிலையில் ஒரு வழியாக தட்டுத்தடுமாறி ஆட்டத்தை டிரா செய்திருக்கிறது ஆஸ்திரேலியா. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது ஸ்மித்தால் தான். எனவே, ரசிகர்களின் சந்தேகம் அதிக வலு பெற்றிருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Monday, August 19, 2019, 13:21 [IST]
Other articles published on Aug 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+