Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போதும் லிஸ்ட் பெருசா இருக்கு.. ரிஷப் பண்ட்க்கு இப்படி ஒரு பாராட்டா..? அதிரடி ஆஸி. வீரர் பாராட்டு

மொஹாலி : மொஹாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் அடித்த பிறகு, இதனை சேஸ் செய்வது ஆஸ்திரேலியாவுக்கு கடினம் என ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் வார்னர், டோனிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் கூட ஆஸ்திரேலிய அணி நான்கு பந்துகள் எஞ்சிய நிலையில் இலக்கை வெற்றிகரமாக எட்டியது.

ஆஸ்திரேலிய அணியின் இந்த அதிரடி ஆட்டம் பல்வேறு தரப்பினரிடம் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தோல்வி குறித்தும் பல்வேறு வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.

ஜாஸ் இங்கிலிஷ்

ஜாஸ் இங்கிலிஷ்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன், ஜாஸ் இங்கிலீஷ், டேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேன் ஆக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அதிரடியாக விளையாடுவார் என்று குறிப்பிட்டார். சீனியர்கள் பலர் இல்லாத நிலையில் ஜூனியர் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க இந்த தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

 இந்தியாவின் எதிர்காலம்

இந்தியாவின் எதிர்காலம்

இதனை தொடர்ந்து இந்திய அணி குறித்து பேசிய ஹைடன், ரிஷப் பண்டை சேர்க்காதது தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக கூறினார். தாம் ஒரு தேர்வு குழுவினராக இருந்தால் நான் தேர்வு செய்யும் அனைத்து அணியிலும் பண்ட் இருப்பார் என்று அவர் கூறினார். இந்திய அணியின் எதிர்காலம் பண்ட். அவருக்கு நீங்கள் ஆதரவு கொடுத்து நேரமும் கொடுக்க வேண்டும் என்று ஹைடன் வலியுறுத்தினார்.

நேரம் கொடுங்கள்

நேரம் கொடுங்கள்

ரன்களே அடிக்கவில்லை என்றால் கூட அவர் என் அணியில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்று குறிப்பிட்ட ஹைடன் எல்லா விதத்திலும் ரிஷப் பண்ட் சிறந்த வீரராக திகழ்கிறார் என்று கூறினார். தற்போது தினேஷ் கார்த்திக் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷராக செயல்படுகிறார்.

கார்த்திக்கிற்கு அழுத்தம்

கார்த்திக்கிற்கு அழுத்தம்

கடைசியாக விளையாடிய நான்கு டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் 7,6,12,1* என்ற ரன்களை அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கூட கார்த்திக் 6 ரன் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் கார்த்திகை நீக்கி விட்டு ரிஷப் பண்டை சேர்க்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

Story first published: Wednesday, September 21, 2022, 22:50 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+