Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“விடைபெறுகிறேன்”.. ஆஸ்திரேலிய ஜாம்பவான் மிட்செல் ஸ்டார்க் ஓய்வு அறிவிப்பு.. டி20க்கு குட்பை

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு புயல் மிட்செல் ஸ்டார்க், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 35 வயதான மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலியாவுக்காக 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கியப் பங்காற்றினார். கடைசியாக 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்றிருந்தார். அவரது இந்த ஓய்வு முடிவின் பின்னணியில் நீண்டகால திட்டம் ஒன்றையும் வைத்துள்ளார்.

Australian Legend Mitchell Starc retires from T20I cricket to focus on Test and ODI World Cup

"டெஸ்ட் கிரிக்கெட்டே என் முதல் முன்னுரிமை!"

தனது ஓய்வு முடிவு குறித்துப் பேசிய மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் முழுமையாகக் கவனம் செலுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

"டெஸ்ட் கிரிக்கெட் தான் எப்போதும் எனது முதல் மற்றும் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய ஒவ்வொரு டி20 போட்டியையும் நான் நேசித்தேன். குறிப்பாக, 2021 உலகக் கோப்பை வெற்றி மறக்க முடியாதது. நாங்கள் கோப்பையை வென்றது மட்டுமல்ல, அந்தத் தொடர் முழுவதும் ஒரு சிறந்த குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகப் பயணித்தோம்" என்று கூறினார்.

எதிர்கால இலக்குகள் என்ன?

அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு மிக நீண்ட மற்றும் கடினமான டெஸ்ட் தொடர்கள் காத்திருக்கின்றன. 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் வங்கதேசத்திற்கு எதிரான உள்நாட்டுத் தொடர், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்கள், 2027-ல் இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான 150-வது ஆண்டுவிழா டெஸ்ட் மற்றும் ஆஷஸ் தொடர் என மிக நீண்ட பயணத்திற்குத் தயாராக வேண்டியுள்ளது.

இதற்குப் பிறகு, 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையையும் ஆஸ்திரேலியா எதிர்கொள்ள உள்ளது.

"வரவிருக்கும் இந்திய டெஸ்ட் தொடர், ஆஷஸ் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எனது உடலை கட்டுக்கோப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள இதுவே சிறந்த வழி என்று நான் உணர்கிறேன். எனது இந்த முடிவு, அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இளம் பந்துவீச்சாளர்கள் தயாராவதற்கும் போதுமான நேரத்தை வழங்கும்" என்று ஸ்டார்க் விளக்கமளித்துள்ளார்.

ஸ்டார்க்கின் இந்த முடிவு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான அவரது நீண்ட கால திட்டமாக அமைந்துள்ளது. அவரது விலகல் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்குப் பின்னடைவாக இருந்தாலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது ஆதிக்கம் தொடரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Tuesday, September 2, 2025, 7:25 [IST]
Other articles published on Sep 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+