Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல ஆஸ்திரேலிய வீரருக்கு மாரடைப்பு..! மருத்துவமனையில் அனுமதி..!! ரசிகர்கள் கண்ணீர்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ராட் மார்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

74 வயதான ராட் மார்ஷ் கடந்த 50 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் முக்கிய நபராக இருந்து வந்துள்ளார்.

மார்க் பவுச்சர், கில்கிறிஸ்ட், தோனிக்கு முன் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் ராட் மார்ஷ் படைத்திருந்தார்.

திடீரென்று மயக்கம்

திடீரென்று மயக்கம்

ராட் மார்ஷ் ஒரு கிரிக்கெட் போட்டியை காண சென்றுள்ளார். அப்போது அங்குள்ள நண்பர்களிடம் பீர் குடிக்க வேண்டும் என்று கூறிய நிலையில், திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஜான் மற்றும் டேவிட் என முக்கிய நிர்வாகிகள், ராட் மார்ஷை தங்களது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் பாராட்டு

மருத்துவர்கள் பாராட்டு

தற்போது ராட் மார்ஷ் ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதாகவும், காரில் வராமல் ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்தால் நிச்சயம் உயிர் பிரிந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ராட் மார்ஷ் மருத்துவமனையில் சேர்ந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், அவர் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கில்லாடி விக்கெட் கீப்பர்

கில்லாடி விக்கெட் கீப்பர்

இதுவரை 96 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ராட் மார்ஷ் 355 பேரை ஆட்டமிழக்க வைத்துள்ளார். இது அவருடைய காலத்தில் உலக சாதனையாக கருதப்பட்டது. டெஸ்டில் 3633 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும். இவர் இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவும் சிறிது காலம் செயல்பட்டுள்ளார்.

இயக்குனர்

இயக்குனர்

இதன் மூலம் இரு நாட்டுக்காக தேர்வுக்குழுத் தலைவராக இருந்த ஒரே வீரர் என்ற பெருமையையும் மார்ஷ் படைத்திருந்தார். மார்ஷ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும் இருந்துள்ளார். அப்போது தான் மார்ஷ் கீழ் ரிக்கி பாண்டிங், மெக்ராத், பிரட் லீ போன்ற வீரர்கள் பட்டை தீட்டப்பட்டனர்.

Story first published: Thursday, February 24, 2022, 17:54 [IST]
Other articles published on Feb 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+