Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதுகில் தட்டுறாங்க, துரத்தித் துரத்தி வர்றாங்க.. ஆஸி. மீடியா மீது தெ. ஆப்பிரிக்க அணி பாய்ச்சல்!

அடிலைட்: ஆஸ்திரேலிய ஊடகங்கள் தென் ஆப்பிரிக்க வீரர்களை தொடர்ந்து குறி வைத்து தாக்கி செய்தி போடுகின்றன. தொந்தரவு செய்கின்றன என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நிர்வாகம் காட்டமாக கூறியுள்ளது.

இந்த தொந்தரவு மிகத் தீவிரமாக இருப்பதாகவும், தொடர்ந்து ஹராஸ் செய்வதாகவும், மரியாதைக்குறைவான வகையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் நடந்து கொள்வதாகவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சாடியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கடுமையான புகாரை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டூபிளஸிஸ் குறித்து சேனல் 9 புகார்

டூபிளஸிஸ் குறித்து சேனல் 9 புகார்

தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளஸிஸ் பந்தை சுரண்டி சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய டிவியான சேனல் 9 புகார் கூறி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. இதுதான் தென் ஆப்பிரிக்காவை கொந்தளிக்க வைத்து விட்டது.

அணி மேலாளர் கோபம்

அணி மேலாளர் கோபம்

இந்த விவகாரம் குறித்து தென் ஆப்பிரிக்க அணி மேலாளர் டாக்டர் முகம்மது மூசாஜி கூறுகையில், ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பாக சேனல் 9 ஆகியவை கடந்த சில நாட்களாக எங்களது அணி வீரர்களை குறி வைத்துத் தாக்கி வருகின்றன. தவறான செய்திகளைப் போடுகின்றன.

பேச விரும்பவில்லை

பேச விரும்பவில்லை

பந்தைச் சுரண்டியதாக கூறப்படுவது குறித்து கேப்டன் டூபிளஸிஸ் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியும் கூட சேனல் 9 தொடர்ந்து வற்புறுத்தி வருவது ஏன் என்று புரியவில்லை. சேனல் 9 செயல் எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது.

அடுத்தடுத்து தொந்தரவு செய்கிறார்கள்

அடுத்தடுத்து தொந்தரவு செய்கிறார்கள்

இதுவரை 3 முறை ஆஸ்திரேலிய ஊடகங்கள் எங்களது வீரர்களை தொந்தரவு செய்துள்ளனர். இது தவறு, ஏற்க முடியாதது. மீடியா புரோட்டோகாலை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தவறி வருகிறார்கள்.

விமான நிலையத்தில் அவமரியாதை

விமான நிலையத்தில் அவமரியாதை

சேனல் 9 செய்தியாளர் அடிலைடு விமான நிலையத்தில் எங்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டார். தொடர்ந்து டூபிளஸிஸிடம் கருத்து கேட்டு அவரைத் தொந்தரவு செய்தார். வீரர்களுக்கு மத்தியில் நடந்து போய் தொந்தரவு செய்தார். கையில் ஏதோ பொருளை வைத்துக் கொண்டு அவர் தொடர்ந்து வற்புறுத்தியபடி பேசியது பாதுகாப்பு விதிமீறல் ஆகும்.

முதுகில் தட்டினார்

முதுகில் தட்டினார்

மேலும் அணி மேலாளரின் முதுகிலும் அந்த செய்தியாளர் தட்டினார். இது அவமரியாதையான செயலாகும். இதேபோல திருப்பிச் செய்ய எங்களுக்கு நேரமாகாது. அந்த செய்தியாளரின் செயல் ஏற்க முடியாதது. தவறானது என்று முகம்மது கூறியுள்ளார்.

Story first published: Monday, November 21, 2016, 13:52 [IST]
Other articles published on Nov 21, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+