Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடாலுக்கு களத்தின் எதிரிகளிடமிருந்து குவிந்த வாழ்த்து..!! கிரிக்கெட் கடவுளும், மேஜிசயனும் பாராட்டு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் நடால், 21 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

Recommended Video

Nadal fights back to clinch the Australian Open and lift 21st Grand Slam title | OneIndia Tamil

மாலை 7.30 மணிக்கு தொடங்கிய போட்டி இரவு 1.20 ஆகி விட்டது. ஆனால் மைதானத்தில் இருந்த 20, 000 கண் விழிகளும் கொஞ்சம் கூட அசரவில்லை.

போட்டி முடிந்தும் நடால் தூங்கி இருக்க மாட்டார். ஏன் என்றால் அவ்வளவு வாழ்த்து மழையில் நடால் நினைந்து கொண்டு இருந்தார்.

ரோஜர் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர்

21 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற நடாலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு எதிராக டென்னிஸ் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். 2 மாதங்களுக்கு முன்பு தான் நாம் காயங்களுடன் இருந்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தோம்.ஆனால் இன்று நீங்கள் சாம்பியனாகி விட்டீர்கள். உங்களை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்று ஃபெடரர் பாராட்டினார்.

ஜோகோவிச்

ஜோகோவிச்

கொரோனா ஊசி போடாததால் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிச்சும் நடாலுக்கு வாழ்த்து கூறியுள்ளார். 21வது கிராண்ட் ஸ்லாம் வென்றது சிறந்த சாதனை, உங்களுடைய போர்குணத்துக்கு கிடைத்த வெற்றி. மேட்வடெவ்வும் சிறப்பாக விளையாடினார். நல்ல ஆட்டம் என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

முதல் 2 செட்டை தோற்ற பிறகு, மீண்டும் போட்டியை வெல்வது எல்லாம் பிரமிப்பான விசயம். 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற நடாலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது சாதாரண சாதனை கிடையாது என்று நடாலுக்கு டிவிட்டர் மூலம் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்தார்

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ்

விளையாட்டு என்றால் என்ன என்பதை மீண்டும் நடால் ஒரு முறை காட்டியுள்ளார். இறுதி வரை நடால் கடுமையாக போராடினார்.இவ்வளவு சாதனை படைத்தும் அதனை தலையில் ஏற்றி கொள்ளாமல் இருக்கிறார். உண்மையான ஜாம்பவான் என்று டிவில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, January 30, 2022, 23:29 [IST]
Other articles published on Jan 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+