Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு… வங்கதேச கிரிக்கெட் வீரர்களை குறி வைத்து தாக்கப்பட்டதா?

Recommended Video

மசூதிக்குள் துப்பாக்கி சூடு : நியூசிலாந்து பிரதமர் கண்டனம் -வீடியோ

கிறிஸ்ட்சர்ச்:நியூசிலாந்து நாட்டில் மசூதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த மசூதிக்கு தொழுகைக்காக வங்கதேச கிரிக்கெட் அணியினர் செல்ல முயன்றபோது, இந்த தாக்குதல் நடந்துள்ளதால் அவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே பெரிய மசூதி உள்ளது. அந்த மசூதியில் வெள்ளிக்கிழமை என்பதால், தொழுகை நடந்தது. ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டோர் தொழுகையில் இருந்தனர்.

அப்போது, திடீரென உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் தொழுகையில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். அதிர்ச்சியடைந்த மக்கள், அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

15 நிமிடங்கள் வரை

15 நிமிடங்கள் வரை

சிலர் தரையில் படுத்துக் கொண்டு தற்காத்தனர். ஆனால், துப்பாக்கிச் சூடு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. இதே போன்று கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள மற்ற மசூதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

27 பேர் பலி

27 பேர் பலி

இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 27ஐ எட்டியுள்ளதாக தெரிகிறது. மிகப்பெரிய தாக்குதல் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

கல்வி நிலையங்கள் மூடல்

கல்வி நிலையங்கள் மூடல்

கிறிஸ்ட் சர்ச் நகரில் பதற்றமான சூழல் நிலவுவதால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி சென்ற குழந்தைகளை அழைத்துவர பெற்றோர்கள் வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான நிலை

பதற்றமான நிலை

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:துப்பாக்கிச் சூட்டால் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எத்தனை இடங்களில் இதுபோன்று துப்பாக்கிசூடு நடக்கிறது எனத் தெரியவில்லை. கிறிஸ்ட் சர்ச் நகரில் கடைகள்,வணிக வளாகங்கள், நூலகம் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்

வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்

இதற்கிடையே வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த மசூதிக்கு தொழுகைக்காகச் சென்றனர். ஆனால், துப்பாக்கிச் சூடு குறித்து கேள்விப் பட்டதும் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.

தொழுகைக்காக சென்றோம்

தொழுகைக்காக சென்றோம்

இது குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறியதாவது:அனைத்து வீரர்களும் மசூதிக்கு தொழுகைக்கு செல்வதற்காக பேருந்தில் மசூதிக்கு வந்தோம்.

பாதுகாப்பாக உள்ளோம்

பாதுகாப்பாக உள்ளோம்

மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து தப்பி ஓடினோம். யாருக்கும் காயம் இல்லை. பாதுகாப்பாக இருக்கிறோம். வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கூறினார்.

டுவிட்டரில் தகவல்

இதனிடையே, துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் வீரர்களின் நிலைமை பற்றி தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியிருக்கிறது. இது குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நலன் விசாரிப்பு

நலன் விசாரிப்பு

மசூதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு குறித்து அறிந்தோம். வீரர்களை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர்கள் பாதுகாப்புடன் தான் உள்ளனர். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

Story first published: Friday, March 15, 2019, 10:39 [IST]
Other articles published on Mar 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+