முதல் டெஸ்ட்: இலங்கையிடம் தோற்றபோதும், 'உலக சாதனை' படைத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஓகீப் மற்றும் நெவில் ஜோடி உலக சாதனையொன்றை படைத்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை வெறும், 117 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்சில் ஆஸி. 203 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
2வது இன்னிங்சில் கலக்கிய இலங்கை 353 ரன்களை குவித்தது. 268 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடி வந்த ஆஸ்திரேலியாவை ரங்கனா ஹீரத்தின் சுழல் மூழ்கடிக்க தொடங்கியது. அந்த அணி, 56.1 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வி விளிம்பில் தத்தளித்தது.

ஜோடி
அப்போதுதான், விக்கெட் கீப்பர் நெவிலுடன் ஜோடி சேர்ந்தார் ஓகீபே. இருவரும் இணைந்து விக்கெட் விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தனர்.

படுத்தேவிட்டனர்
இறுதி நாள் ஆட்டம் என்பதால் டிரா செய்ய மிகவும் மெனக்கட்டனர். எனவே 178 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்களை மட்டுமே இந்த ஜோடி சேர்த்தது.

ஒருவழியாக முடிவுக்கு வந்தது
இருப்பினும், 115 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்திருந்த நெவில் 85.5வது ஓவரில் அவுட்டானபோது இந்த பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. இவ்விருவரும் 29.4 ஓவர்கள் இணைந்து ஆடியுள்ளனர். ஆனால் ரன் ரேட் வெறும் 0.13 மட்டுமே.

சாதனை
100 பந்துகள் அல்லது அதற்கு மேல் பந்துகளை சந்தித்த ஒரு ஜோடி எடுத்த குறைந்த ரன் இதுதான். முன்னதாக, 2015ம் ஆண்டு டிசம்பரில், தென் ஆப்பிரிக்காவின், டிவில்லியரஸ் மற்றும் ஹசிம் ஆம்லா ஜோடி, இந்தியாவுக்கு எதிரான போட்டியில், 253 பந்துகளில் 27 ரன்களை எடுத்ததே ஆமை வேக ரன் குவிப்பு சாதனையாக இருந்தது.


Click it and Unblock the Notifications