Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னென்ன பன்றாங்க.. இந்திய அணியின் சுழலை சமாளிக்க.. வலதுகை பேட்ஸ்மேனாக மாறிய வார்னர்!

நாக்பூர்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சை சமாளிப்பதற்காகா ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், வலதுகை பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை முதல் நாக்பூரில் தொடங்கவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின், இந்திய அணி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் என்றாலே வழக்கமாக சர்ச்சைகளும், குற்றச்சாட்டுக்களும் எழுவது வழக்கம் தான். ஆனால் இந்த முறை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக ஏராளமான மாற்றங்களை ஆஸ்திரேலியா அணி செய்து வருகிறது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

வழக்கமாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் அணி அந்த நாட்டின் தட்ப வெட்ப சூழலுக்கு மாற்றங்கள் செய்ய, பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும். ஆனால் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி பயிற்சி போட்டிகள் வேண்டாமென்று சொன்னதோடு, பெங்களூரு அருகே உள்ள ஆலூர் பகுதியில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

அஸ்வின் சுழல்

அஸ்வின் சுழல்

குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பதற்காக, அதற்கேற்றவாறு பிட்ச் தயார் செய்து பயிற்சிகளில் ஈடுபட்டது. அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை போலவே பந்துவீசும் பரோடாவைச் சேர்ந்த 21 வயதாகும் இளம் வீரர் மகேஷ் பத்தியாவை வைத்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் லபுஷேன், கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சுழற்பந்துவீச்சுக்கு என்று பிரத்யேக பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.

திட்டத்துடன் வந்த ஆஸி.

திட்டத்துடன் வந்த ஆஸி.

இதுவரை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது ஆஸ்திரேலியா அணி சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்திறங்கும். ஆனால் இம்முறை சுழற்பந்துவீச்சை சமாளிக்க தயாராகி வந்துள்ளது. இங்கு வந்த பின்னரும், இந்திய வீரர்களின் மன ஓட்டத்தை அறிவதற்காக அஸ்வினை போலவே பந்துவீசும் ஒருவருடன் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

வார்னரின் பயிற்சி

வார்னரின் பயிற்சி

இவையெல்லாவற்றையும் கடந்து இடதுகை வேட்ஸ்மேனான டேவிட் வார்னர், சுழற்பந்துவீச்சை சமாளிப்பதற்காக வலதுகை பேட்ஸ்மேனாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலிய வீரர்களின் பயிற்சியும் திட்டமிலும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான எதிர்பார்ப்பை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நாளைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் திட்டமிடலுக்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Wednesday, February 8, 2023, 23:43 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+