
சான்ட்விச் பஞ்சாயத்து
ஆஸ்திரேலிய வீரர்களில் யாரோ ஒருவர் ஊடகங்களிடம் அவரைப் பற்றிய புகார்களை பட்டியலிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. அதில் ஒரு வீரர் போட்டியின் இடையே சாப்பிட சான்ட்விச் ஒன்றை தன் பான்ட் பாக்கெட்டில் வைத்திருந்ததாகவும், ஜஸ்டின் லாங்கர் அதை அனுமதிக்க மறுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவம்
வீரர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அவர் தலையிடுகிறார் என்பதை உணர்த்தவே இப்படி ஒரு புகார் கூறப்பட்டுள்ளது. மேலும், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் இழக்காமல் ஆடி வந்த போது நடந்த சம்பவம் ஒன்றையும் கூறி இருக்கிறார்கள்.

ஹெட்மாஸ்டர்
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின் போது இந்திய அணியை வீழ்த்த யோசனை கூறுகிறேன் என வீரர்களிடம் அளவுக்கு அதிகமான புள்ளி விவரங்களை கூறி ஹெட்மாஸ்டர் போல வீரர்களை எங்கே பந்து வீச வேண்டும் என அவர் கூறினாராம்.

மனநிலை
மேலும், ஜஸ்டின் லாங்கரின் தனிப்பட்ட மனநிலை மாற்றங்களை அணி மீது திணித்து வருவதாகவும் கூறி இருக்கிறார்கள். ஒரு முறை அவர் தன் தந்தையை உதாரணமாகக் கூறி வீரர்களுக்கு உத்வேகம் அளிக்க முயற்சி செய்தார் எனவும் கூறப்படுகிறது. இந்த விவகாரங்களால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் குழப்பம் ஏற்படத் துவங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











