Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லை.. களத்தில் இறங்கிய ஆஸி. பிரதமர்.. இன்ப அதிர்ச்சியில் வீரர்கள்!

கான்பெர்ரா : இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய பிரதமர், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச் சென்று "வாட்டர் பாய்" வேலை பார்த்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா? என்பது தெரியவில்லை. ஆஸ்திரேலிய பிரதமரை களத்தில் வாட்டர் பாயாக பார்த்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

ரசிகர்களுக்கு அதை விட பெரிய ஆச்சரியமாக அமைந்தது இந்த சம்பவம். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த சம்பவத்தை குறித்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

பயிற்சிப் போட்டி

பயிற்சிப் போட்டி

இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரில் ஆட உள்ள அந்த அணி,. அதற்கு முன் பயிற்சிப் போட்டியில் ஆடியது. பிரைம் மினிஸ்டர் XI என்ற அணியின் பெயரில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

இலங்கை பேட்டிங்

இலங்கை பேட்டிங்

இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஜபக்ஷா 24, பெர்னாண்டோ 38 ரன்கள் எடுத்தனர். டி சில்வா 26 ரன்கள் எடுத்தார்.

பிரதமர் என்ன செய்தார்?

16 ஓவர்களில் அந்த அணி 110 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாட்டர் பாட்டில் அடங்கிய குடுவையை எடுத்துக் கொண்டு வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க சென்றார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

ஆஸ்திரேலிய வீரர்கள் அதை சற்றும் எதிர்பாராமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அனைவரின் முகத்திலும் இன்ப அதிர்ச்சி தெரிந்தது. இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவியது.

போராடி வெற்றி

இந்தப் போட்டியில் இலங்கை 20 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா போராடி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Friday, October 25, 2019, 19:26 [IST]
Other articles published on Oct 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+