For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவை சமாளிக்க நேரத்தை கடத்திய ஆஸ்திரேலியா! பெனால்டி கட்ட சொன்ன ஐசிசி!!

பிரிஸ்பேன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி மெதுவாக பந்துவீசி போட்டியை தாமதப்படுத்தியதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பிரிஸ்பேன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி மெதுவாக பந்துவீசி போட்டியை தாமதப்படுத்தியதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.

முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

தாமதமாக பந்துவீசினால் அபராதம்

தாமதமாக பந்துவீசினால் அபராதம்

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்துவீசிய போது தாமதம் ஏற்பட்டது. சர்வதேச போட்டிகளில் தாமதமாக பந்துவீசி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை முடிக்காவிட்டால் அதற்கு ஐசிசி தண்டனை விதிக்கும்.

ஒரு ஓவர் குறைவு

ஒரு ஓவர் குறைவு

அதன்படி ஆஸ்திரேலிய அணி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து ஓவர்களையும் முடிக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஓவர் குறைவாகவே பந்து வீசிஇருந்தது. இதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் எவ்வளவு?

அபராதம் எவ்வளவு?

அதன்படி, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அவர்கள் போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதமும், கேப்டன் ஆரோன் பின்ச்சுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடலுக்கு அதிக நேரம்

திட்டமிடலுக்கு அதிக நேரம்

முதல் டி20 போட்டி மழையால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி 174 ரன்கள் இலக்கை சேஸ் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்களை சமாளிக்க, ஆஸ்திரேலிய அணி திட்டமிடலுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதே இந்த தாமதத்துக்கு காரணம்.

Story first published: Saturday, November 24, 2018, 12:09 [IST]
Other articles published on Nov 24, 2018
English summary
Australian team fined for Slow over rate in first T20 match against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X