Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்.. ஒரே போட்டியில் 17 சிக்ஸர்கள்.. 18 வயது ஆஸ்திரேலிய வீரர் சாதனை

அடிலெய்டு : ஆஸ்திரேலியாவில் அண்டர் - 19 தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் இளம் வீரரான ஆலிவர் டேவிஸ் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் மிகச் சில வீரர்களே ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

அந்த வரிசையில் இந்த இளம் வீரரும் சேர்ந்துள்ளார். இவர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்ததோடு, அந்த போட்டியில் இரட்டை சதமும் அடித்து கலக்கினார்.

எந்த போட்டியில் சாதனை?

எந்த போட்டியில் சாதனை?

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள அடிலெய்டு நகரில் நார்தர்ன் வாரியர்ஸ் அணிக்கும், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையே அண்டர் - 19 தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

ஆறு சிக்ஸர்கள் சாதனை

ஆறு சிக்ஸர்கள் சாதனை

இந்த போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணியில் ஆடிய ஆலிவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 74 பந்துகளில் சதம் கடந்தார். அதன் பின் இன்னும் அதிரடியை கூடிய ஆலிவர் 40வது ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடித்தார். முதல் சதம் அடித்ததில் இருந்து 39 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார் ஆலிவர்.

ஜாம்பவான்களுக்கு இணையான சாதனை

ஜாம்பவான்களுக்கு இணையான சாதனை

இந்த போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்த இந்த இளம் வீரர் 115 பந்துகளில் 207 ரன்கள் அடித்தார். 50 ஓவர் போட்டிகளில் ரோஹித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் ஆகியோர் ஒரே போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். இந்த அண்டர் 19 உள்ளூர் போட்டியில் அதை விட அதிக சிக்ஸர்கள் அடித்தார் இந்த வீரர். அதே போல, 50 ஓவர் போட்டியில் கிப்ஸ், யுவராஜ் சிங், சர் கார்பீல்ட் சோபர்ஸ் ஆகியோர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

எப்படி ஆறு சிக்ஸர்கள் அடித்தார்?

எப்படி ஆறு சிக்ஸர்கள் அடித்தார்?

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தது பற்றி கேட்ட போது, "முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் அடித்தவுடன் அனைத்தையும் சிக்ஸர் அடிக்க முடிவு செய்தேன். அது கடைசியில் நிறைவேறியது" என கூறினார் ஆலிவர். இந்த போட்டியில் ஆலிவர் டேவிஸ் தன் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுத்தார். இந்த போட்டியில் ஆலிவரின் நியூ சவுத் வேல்ஸ் அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, December 4, 2018, 15:14 [IST]
Other articles published on Dec 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+