Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெண்ணை படுக்கைக்கு அழைத்த டிம் பெயின்..!! ஆஸி.கேப்டன் செய்த தில்லாலங்கடி வேலை..

மெல்போர்ன்; ஆண்டுதோறம் ஏதேனும் புகார் மற்றும் குற்றச்சாட்டில் சிக்கவில்லை என்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு தூக்கம் வராது போல.

Recommended Video

Tim Paine quits Australia Test captaincy after off field miscounduct | OneIndia Tamil

ஏற்கனவே ஸ்மித் செய்த தவறால் தான் டிம் பெயினுக்கு கேப்டன் பொறுப்பு தேடி வந்தது. இப்போது டிம் பெயினும் பாலியல் சீண்டல் புகாரில் சிக்கி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்குள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்குள் மீண்டும் பூகம்பம் வெடித்துள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

டிம் பெயின், கடந்த 2017ஆம் ஆண்டின் போது டாஸ்மேனிய கிரிக்கெட் சங்கத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததே புகாராகும். தன்னை டிம் பெயின் உறவு மேற்கொள்ள அழைத்ததாக அந்த பெண், அப்போதே புகார் அளித்திருந்தார். இதன் மீது மூன்று ஆண்டுகளுக்கு முன் டாஸ்மேனியா வாரியத்தில் விசாரணை நடத்தப்பட்டு டிம் பெயின் மீது குற்றம் இல்லை என விசாரணை அறிக்கை தரப்பட்டது

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

கடந்த 2011 ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாமல் இருந்த பெயினுக்கு கேப்டன் பதவி இரண்டே போட்டிகளில் மீண்டும் அணிக்கு வந்த பிறகு தேடி வந்தது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கி, அவர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது

வெற்றி

வெற்றி

இதனையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக டிம் பெயின் ஆஸ்திரேலிய அணியின் 46வது டெஸ்ட் கேப்டனாக பொறுப்பு ஏற்று கொண்டார். ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்ற டிம் பெயின் தலைமையிலான அணி இந்தியாவிடம் சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்றது. இருப்பினும் டிம் பெயின் தவிர வேறு ஆள் இல்லை என்பதால் தொடர்ந்து கேப்டன் பதவியில் அவர் நீடித்தார்

மீண்டும் வெடித்தது

மீண்டும் வெடித்தது

3 ஆண்டுகளுக்கு முன் டிம் பெயின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை டாஸ்மேனிய கிரிக்கெட் சங்கம் காதும் காதும் வைத்தால் போல் வெளியே தெரியாமல் பார்த்து கொண்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பெண் அளித்த குற்றச்சாட்டு தற்போது வெளிவந்துள்ளது. இருப்பினும் டிம் பெயினிடம் இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏதுவும் கேட்கவில்லை என்றும் அவராக தான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னிப்பு

மன்னிப்பு

இதனிடையே இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிம் பெயின், 3 ஆண்டுகளுக்கு முன் இந்த தவறை செய்தேன், ஆனால் அது மிகப் பெரிய குற்றமில்லை என்று விசாரணை முடிவில் தெரியவந்தது. இதனால் என் மீதான புகார்கள் களையப்பட்டு மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டேன். இருப்பினும் நான் செய்தது தவறு தான், ஆஸ்திரேலிய கேப்டனாக இருக்கும் நபர் இதனை செய்திருக்க கூடாது. என் தவறு குறித்து மனைவியிடம் பேசினேன், அவர் என்னை மன்னித்து விட்டார். ரசிகர்களுடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்று கூறினார்.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

டிம் பெயின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது, அவர் சொந்த முடிவு என்றும், தொடர்ந்து அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவார் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேல் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். .

Story first published: Friday, November 19, 2021, 18:22 [IST]
Other articles published on Nov 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+