Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாலு வருஷம் வாழ்ந்தது போதும்.. மணமுறிவை அறிவித்த ஆஸ்திரேலிய வீராங்கனை

மெல்போர்ன் : கால்பந்தாட்ட வீரர் மாட் டூமுவாவுடனான 4 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி அறிவித்துள்ளார்.

Recommended Video

Sponsors கிடைக்கவில்லை.. தவிக்கும் IPL அணிகள்

இதுகுறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள எல்லீஸ் பெர்ரி மற்றும் மாட் டூமுவா, இந்த முடிவு இருவரும் கலந்தாலோசித்து எடுத்தது என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களது மணமுறிவு குறித்து இந்த ஆண்டின் துவக்கத்திலேயே பேச்சு அடிபட்ட நிலையில் இருவரும் அதை மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மணமுறிவை அறிவித்த எல்லீஸ்

மணமுறிவை அறிவித்த எல்லீஸ்

கால்பந்தாட்ட வீரர் மாட் டூமுவாவுடனான நான்கு வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது இருவரும் கூட்டாக தங்களது மணமுறிவை அறிவித்துள்ளனர்.

மறுத்துவந்த ஜோடி

மறுத்துவந்த ஜோடி

மெல்போர்ன் ரிபல்ஸ் அணிக்காக கால்பந்தாட்டம் ஆடி வருகிறார் மாட் டூமுவா. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இவர்களது மணமுறிவு குறித்து பேச்சு அடிப்பட்டது. இதை இருவரும் மறுத்து வந்தனர். ஆயினும் மெல்போர்னில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் நிகழ்ச்சியில் பெலின்டா கிளார்க் விருதை பெறவந்த எல்லீஸ், திருமண மோதிரம் அணியாமல் வந்ததும், மேடையில் தன்னுடைய கணவர் குறித்து எதுவும் பேசாததும் விவாதத்திற்குள்ளானது.

கூட்டாக அறிக்கை

கூட்டாக அறிக்கை

இந்நிலையில் இருவரும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் இந்த மணமுறிவு குறித்து கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தெளிவாக எடுக்கப்பட்ட முடிவு என்பதில் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த முடிவு இந்த ஆண்டின் துவக்கத்திலேயே எடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளனர்.

297 விக்கெட்டுகள் வீழ்த்திய பெர்ரி

297 விக்கெட்டுகள் வீழ்த்திய பெர்ரி

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்காக விளையாடிவரும் எல்லீஸ் பெர்ரி, 8 டெஸ்ட்கள், 112 ஒருநாள் போட்டிகள் மற்றும் 120 டி20 போட்டிகளில் விளையாடி முறையே, 624, 3022 மற்றும் 1218 ரன்களை குவித்துள்ளார். அனைத்து வடிவங்களிலும் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலக அளவில் சிறப்பான வீராங்கனையாக திகழ்ந்துவருகிறார் எல்லீஸ் பெர்ரி.

Story first published: Sunday, July 26, 2020, 18:21 [IST]
Other articles published on Jul 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+