Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் டி20 உலகக்கோப்பை : 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி.. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதன் இறுதிப்போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு டாஸை போலவே பேட்டிங்கும் சிறப்பாக அமைந்தது.

Australian womens team won the t20 world cup 2023 title for 6th time

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்டர் ஹீலி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் மறுமுணையில் தூண் போல நின்ற மூனி 53 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்களை விளாசினார். இவருக்கு உறுதுணையாக கார்ட்னர் 21 பந்துகளில் 29 ரன்களை குவிக்க 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்களை குவித்தது.

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியிலும் தொடக்க வீராங்கனை லாரா வால்வார்ட் சிறப்பான அடிதளத்தை அமைத்து கொடுத்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் அவருக்கு உறுதுணையாக நிற்கவில்லை. தனி ஒருவராக போராடிய லாரா 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார். கடைசி நேரத்தில் ட்ரையான் மட்டும் 25 ரன்களை அடித்தார்.இதனால் 20 ஓவர்களில் அந்த அணியால் 6 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

Australian womens team won the t20 world cup 2023 title for 6th time

இதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணி வெல்லும் 6வது டி20 உலகக்கோப்பை இதுவாகும். சுவாரஸ்ய விஷயமாக, அந்த அணி 2வது முறையாக ஹாட்ரிக் முறையில் கோப்பையை வென்றுள்ளது. 2010, 2012, 2014 என தொடர்ச்சியாக முன்பு வென்றிருந்தனர். இதே போல தற்போது 2018, 2020, 2023ம் ஆண்டுகளில் வென்றுள்ளது.

Story first published: Sunday, February 26, 2023, 22:37 [IST]
Other articles published on Feb 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+