Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்காக தயாரான ஆஸி.. "அவுட் ஆஃப் சிலபஸில்" வந்த ஜடேஜா.. 2 பேரும் கூட்டணி அமைத்து சாதனை

நாக்பூர் : எதிர்பாராதது எதிர்பாராத நேரத்தில் நடக்கும் என்பது வாழ்க்கையில் மட்டுமல்ல, விளையாட்டுக்கும் அது பொருந்தும். தற்போது அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு சரியாக நடந்திருக்கிறது என்று சொல்லலாம்.

ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங் வரிசையில் முதல் ஏழு பேரில் ஐந்து வீரர்கள் இடது கை பேட்ஸ்மேன்கள். எப்போதும் இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை அஸ்வின் எளிதாக வீழ்த்தி விடுவார்.

இதற்காக ஆஸ்திரேலிய அணியினர் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்காக அஸ்வினை போல் பந்து வீசும் நபரை எல்லாம் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

மேலும் மகேஷ் பித்தியா என்ற அந்த வீரர் அஸ்வினை போல் பந்து வீசும் காட்சிகளை பரவ விட்டு ஆஸ்திரேலியா வீரர்கள் நீங்கள் எந்த சவாலை கொண்டு வந்தாலும் அதற்கு நாங்கள் தயார் என்பதைப் போல் பிம்பத்தை ஏற்படுத்தினர். ஆனால் நடந்ததோ தலைக்கீழ். முதல் இரண்டு விக்கெட்டுகளையும் ஆட்டத்தில் சில மணித்துளிகளில் வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் ,முகமது சமி ஆகியோர் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம் கொடுத்தனர்.

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடி

நாங்க தான் அஸ்வினுக்கு எதிராக சிறப்பாக தயார் செய்து விட்டோமே என்று மிதப்பில் இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். எப்படி பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்காக ஒரு கேள்வியைப் படித்துவிட்டு நிம்மதியாக இருக்கும் சமயத்தில் தேர்வு எழுதும் போது சிலபஸிலே இல்லாத கேள்வி வந்து அதிர்ச்சி கொடுக்குமோ, அதேபோல் அஸ்வினுக்கு தயாராகி சென்ற ஆஸ்திரேலியாவுக்கு ஜடேஜா கடும் நெருக்கடி கொடுத்தார்.

அடுத்தத்து விக்கெட்

அடுத்தத்து விக்கெட்

84 ரன்கள் இரண்டு விக்கெட் என்று ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடிய நிலையில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் மார்னஸ் லாபஸ்சேன் விக்கெட்டையும் மேட் ரீன்சா விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா சரிவை நோக்கி சென்றது. இதனை அடுத்து அதிரடியாக விளையாடிய ஸ்மித் விக்கெட்டையும் ஜடேஜா 37 ரன்களில் போல்ட் ஆக்கினார்.

5 விக்கெட்

5 விக்கெட்

அத்துடன் ஜடேஜா நிற்கவில்லை. அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த பீட்டர் ஹான்ஸ்கோப் விக்கட்டையும் ஜடேஜா தான் சாய்த்தார். இதேபோன்று அறிமுகவீரராக களமிறங்க மோர்பி விக்கெட்டையும் ஜடஜாவுக்கு கிடைத்தது. இதன் மூலம் 22 ஓவரில் 47 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்தி இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஜடேஜா கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.

தவறு செய்த ஆஸி

தவறு செய்த ஆஸி

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் பங்கேற்ற ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ்நாட்டு அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் ஜடேஜா குறித்து கவனம் செலுத்தாமல் அஸ்வினை மட்டுமே ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்கொண்டது தவறாக போய் முடிந்து விட்டது.

ஜடேஜா - அஸ்வின் கூட்டணி

ஜடேஜா - அஸ்வின் கூட்டணி

இனி ஜடேஜா போல் யாராவது பந்துவீசுவார்களா என்று தேடி அவர்களை அழைத்துக் கொண்டு பயிற்சி முகாமில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டாலும் ஆச்சரியம் இல்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் ஜடேஜா ஜோடி 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 389 விக்கெட்களை இருவரும் வீழ்த்தி இருக்கிறார்கள். இதில் இருவரும் சேர்ந்து ஐந்து விக்கெட்டுகளை 25 முறை கைப்பற்றி இருக்கிறார்கள்.

Story first published: Thursday, February 9, 2023, 18:40 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+