For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெரும் புயல்களுக்கு மத்தியில் ஒரு "குட்டி பகவதி"... பிரணவ் தனவாடே!

மும்பை: பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல்.. போன்ற பெரும் புயல்கள் கூட இந்த இளம் புயலைப் பார்த்து ஆச்சரியப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூட இவரைப் போல தங்களது இளம் பிராயத்தில் ஆடியதில்லை. அந்த வகையில் உலக மகா கிரிக்கெட் சாதனையைப் படைத்து விட்டார் மும்பையின் 15 வயது பள்ளி மாணவன் பிரணவ் தனவாடே.

அசுரத்தனமாக ஆடிய பிரணவ் 1009 ரன்களைக் குவித்து புதிய வரலாறு படைத்து விட்டார். உலகின் எந்த மூலையிலும் இப்படி யாரும் பேட் செய்ததே இல்லை என்பதால் உலக அளவில் இரண்டே நாட்களில் சூப்பர் ஹீரோவாக உயர்ந்து விட்டார் பிரணவ்.

திங்கள்கிழமை தேசிய அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த பிரணவ், செவ்வாய்க்கிழமை 1000 ரன்களைக் குவித்து உலகத்தையே தன் பக்கம் திருப்பி விட்டார்.

327 பந்துகளில்

327 பந்துகளில்

1009 ரன்களை இவர் வெறும் 327 பந்துகளில் எடுத்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 396 நிமிடங்கள். இதில் 128 பவுண்டரிகளும், 59 சிக்ஸர்களும் அடக்கம்.

1465 எடுத்து டிக்ளேர்

1465 எடுத்து டிக்ளேர்

இவர் ஆடிய திருமதி கேசி காந்தி பள்ளியானது 3 விக்கெட்களை மட்டும் இழந்து 1465 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இந்த ஸ்கோரில் முக்கால்வசியை எடுத்துக் குவித்தவர் பிரணவ். அவரது ஸ்டிரைக்கிங் ரேட் 312.38 ஆகும்.

வரலாற்றுச் சாதனை

வரலாற்றுச் சாதனை

சாதாரண ஆட்டோ டிரைவரின் மகனான பிரணவ் கிரிக்கெட்டை ஒரு வேள்வியாக மேற்கொண்டு கடினமாக உழைத்து இந்த சாதனையைச் செய்துள்ளார். தன்னால் முடியும் என்று நினைத்ததால்தான் இந்த சாதனையைப் படைக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

விக்கெட் கீப்பர்

விக்கெட் கீப்பர்

பிரணவ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். 10வது படித்து வரும் பிரணவ் வலது கை பேட்ஸ்மேன் ஆவார். 6 வயது முதலே இவர் கிரிக்கெட் ஆடி வருகிறாராம். ஆரம்பம் முதலே பேட்டிங்கில் திறமையைக் காட்டி வருகிறாராம். ஆனால் சரியான பயிற்சிக் களம் கிடைக்காமல் தவித்து வருகிறாராம் இந்த இளம் வீரர்.

1362 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

1362 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தப் போட்டியில் பிரணவ் அணியை எதிர்த்து ஆடிய ஆர்யா குருகுல் அணி தனது 2வது இன்னிங்ஸை வெறும் 72 ரன்களுக்கு இழந்தது. முதல் இன்னிங்கில் அந்த அணி வெறும் 31 ரன்களில் சுருண்டது நினைவிருக்கலாம். அதன் பின்னர்தான் பிரணவ் அணியின் இமாலய ரன் குவிப்பு நடந்தேறியது. இப்போட்டியில் 1362 ரன்கள் வித்தியாசத்தில் பிரணவ் அணி வெற்றி பெற்று அசத்தி விட்டது.

உலக மகா சாதனையாளர்கள்

உலக மகா சாதனையாளர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை மேற்கு இந்தியத் தீவுகளின் பிரையன் லாரா எடுத்த 400 நாட் அவுட் என்பதே சாதனையாக உள்ளது. அதேபோல முதல் தர கிரிக்கெட்டிலும் லாரா போட்ட 501 நாட் அவுட் என்பதே சாதனையாக உள்ளது.

ஒரு நாள் சாதனை

ஒரு நாள் சாதனை

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையாக உள்ளது. லிஸ்ட் ஏ போட்டிகளில் சுர்ரே அணியின் அலி பிரவுன் போட்ட 268 சாதனையாக உள்ளது. டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 156 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். டுவென்டி 20 லீக் போட்டிகளில் கிறிஸ் கெய்ல் போட்ட 175 சாதனையாக உள்ளது.

ஜாம்பவான்கள் வரிசையில்

ஜாம்பவான்கள் வரிசையில்

இப்படி பெரிய ஜாம்பவான்கள் வரிசையில் தற்போது குட்டி ஜாம்பவானாக பிரணவ் தனவாடேவின் பெயரும் இணைந்துள்ளது சிறப்பானது என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Thursday, January 7, 2016, 16:23 [IST]
Other articles published on Jan 7, 2016
English summary
It had never happened in the history of cricket. But it all changed on a Tuesday afternoon (January 5) in Mumbai when 15-year-old schoolboy Pranav Dhanawade scored an incredible 1,009 not out (327 balls, 396 minutes, 129 fours, 59 sixes) during an Under-16 inter-school match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+