Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம, மாஸ்.. அபிநந்தனையா கிண்டல் பண்றீங்க.. பாக். மீடியாவுக்கு 'நச்' பதிலடி கொடுக்கும் இந்திய வீடியோ

லண்டன்: அது ஒரு முடி திருத்தும் கடை. அங்கே இந்திய ஜெர்சி போட்டுக்கொண்டு தந்தை உட்கார்ந்திருக்கிறார். பாகிஸ்தான் ஜெர்சி போட்டுக்கொண்டு பாய்ந்து கடைக்குள் வருகிறார் மகன்.

வந்ததும், ஒரு கிப்ட் பார்சலை அப்பாவிடம் கொடுத்து, பிரித்து பார்க்கச் சொல்கிறார். தந்தையும் ஆசையாக பிரித்து பார்த்தால்.. உள்ளே இருப்பது கைக்குட்டை.
என்னப்பா இது? எனக்கு ஏன் கொடுக்குற? என்று தந்தை கேட்டதற்கு, நாளைக்கு, மகன் தந்தையாகப்போகிறான். அதாம்ப்பா, பாகிஸ்தான் ஜெயிக்கப்போகுது. உங்க முகத்தை மூடிக்க இந்த கர்ச்சீப் தேவைப்படும் என்கிறார் தெனாவெட்டுடன் மகன்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

இதைக் கேட்ட தந்தை பேசாமல் இருக்கிறார். கடைக்காரரும், ஷேவ் செய்ய ஆரம்பிக்கிறார். கண்ணுல இந்த வெள்ளரிக்காயை வச்சுக்கோங்க, சும்மா குளுகுளுன்னு இருக்கும் என வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் வைத்துவிட்டு, ஷேவிங் வேலையை ஆரம்பிக்கிறார். ஒரு வழியாக முடிந்ததும், கிளம்புகிறார் மகன்.

அபிநந்தன் ஸ்டைல்

அபிநந்தன் ஸ்டைல்

அப்போதுதான் கண்ணாடியை எதேர்ச்சையாக பார்க்கிறார். அவ்வளவுதான்.. ஏய்.. என்ன இது என்று பதறிவிட்டார் மனிதர். ஏனெனில், இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் ஸ்டைலில் அவருக்கு, மீசை வைத்து ஷேவ் செய்திருந்தார், முடிதிருத்தும் கடைக்காரர்.

டீ கப்புதான்டா உங்களுக்கு

டீ கப்புதான்டா உங்களுக்கு

நக்கலாக தனது மகனை பார்த்து தந்தை சொல்கிறார், "இதுதான் எங்க ஹீரோ ஸ்டைல் தம்பி. உங்களுக்கு வேல்ட் கப்பெல்லாம் கிடையாது. அபிநந்தன் குடித்து மிச்சம் வைத்த டீ கப்பை பெறத்தான் நீங்க தகுதியானவர்கள்" என்கிறார். மகன் கொடுத்த கர்ச்சீப்பை அவரிடமே கொடுத்து, முகத்தை மூடிக்கோப்பா என்று அனுப்பி வைக்கிறார்.

பதிலடி

இதில் தந்தை இந்தியா, மகன் பாகிஸ்தான் என்று உவமைப்படுத்தப்பட்டுள்ளது உங்களுக்கு புரிந்திருக்கும். இந்தியா பாகிஸ்தான், கிரிக்கெட் போட்டி தொடர்பான பாகிஸ்தான் டிவி சேனல் விளம்பரத்தில், அபிநந்தனை சீண்டியிருந்தனர். அவர் பருகிய தேனீர் கோப்பையை வாங்கிக் கொண்டு, கப் எங்களுக்குத்தான் என்று அந்த டிவி விளம்பரத்தில் சொல்லப்பட்டது. அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது, வி செவன் பிக்சர்ஸ் என்ற யூடியூப் சேனலின் இந்த விளம்பரம். ஆமாப்பா.. கப்பு உங்களுக்குதான். நீங்களே காட்டியபடி, அது எங்க ஆளு குடிச்சிட்டு வச்ச எச்சில் டீ கப்தான் என்று நச்சென சொல்கிறது இந்த விளம்பரம். நீங்களும் பாருங்கள்!

Story first published: Saturday, June 15, 2019, 16:42 [IST]
Other articles published on Jun 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+