Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான பகலிரவு போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. அக்சர் படேல் மற்றும் ரவி அஸ்வின் இந்த போட்டியின் ஹீரோக்களாக உள்ளனர்.

ரவி அஸ்வின் 400 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்க இன்னும் 3 விக்கெட்டுகளே பாக்கி உள்ளது. இன்றைய போட்டியில் அவர் இங்கிலாந்தின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து திணறல்

இங்கிலாந்து திணறல்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதற்குள்ளாக 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறி வருகிறது. 100 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

அக்சர் படேல் 4 விக்கெட்டுகள்

அக்சர் படேல் 4 விக்கெட்டுகள்

இந்த போட்டியில் அக்சர் படேல் மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் ஹீரோக்களாக உள்ளனர். அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும் ரவி அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதன்மூலம் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பாதையில் சிறப்பாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

400 ரன்கள் சாதனை

400 ரன்கள் சாதனை

ஸ்பின்னர் ரவி அஸ்வின் இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதன்மூலம் 397 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார். அவர் கேப்டன் ஜோ ரூட், ஜாக் லீச் மற்றும் ஓலி போப் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் தனது 400 விக்கெட்டுகள் சாதனையை அவர் இந்த போட்டியிலேயே மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

டாம் சிப்லி டக்-அவுட்

டாம் சிப்லி டக்-அவுட்

இந்த போட்டியின்மூலம் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ள இஷாந்த் சர்மாவும் இங்கிலாந்து துவக்க வீரர் டாம் சிப்லியின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிப்லி டக் அவுட் ஆகியுள்ளார். அவரது கேட்ச்சை ரோகித் சர்மா சிறப்பாக பிடித்துள்ளார்.

Story first published: Wednesday, February 24, 2021, 22:25 [IST]
Other articles published on Feb 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+