அவர் அணியைவிட்டு போனதும்.. எல்லோரும் பரிதாபப்பட்டனர்.. கோலி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது?
அகமதாபாத்: இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜாவிற்கு அக்சர் பட்டேல் சிறந்த மாற்று வீரராக வந்து இருக்கிறார் என்று கேப்டன் கோலி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா தூசி தட்டியுள்ளது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்திய அணி எளிதாக வீழ்த்தி உள்ளது.
இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் நேற்று சிறப்பாக பந்து வீசினார்கள்.

கோலி
இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் கோலி அளித்த பேட்டியில், இப்படி எல்லாம் இதற்கு முன் நடந்தது இல்லை . இரண்டு நாட்களில் ஆட்டமே முடிந்துவிட்டது. ஜடேஜா காயம் அடைந்த போது பலரும் இந்திய அணியை பார்த்து பரிதாபப்பட்டனர். அவர் போனதும் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் இல்லை என்றனர். ஜடேஜாவிற்கு யார் மாற்று என்று கேள்வி எழுப்பினார்கள்.

அக்சர்
ஆனால் யாருமே எதிர்பார்க்காமல் அக்சர் பட்டேல் உள்ளே வந்தார். ஜடேஜா போலவே வேகமாக ஸ்பின் செய்தார். உயரமாக இவர் வீசிய பந்துகள் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. குஜராத் எப்போதும் பல இடதுகை ஸ்பின் பவுலர்களை உருவாக்கி உள்ளது .

பவுலிங்
இவரின் பவுலிங்கில் ஸ்வீப் ஆட முடியாது. அதேபோல் இவரின் பவுலிங்கில் தடுப்பு ஆட்டமும் ஆட முடியாது. தொடர்ந்து அக்சர் ஸ்டம்ப்பை குறி வைத்து பவுலிங் செய்வார். இதை எதிர்கொள்வது கடினம். ஒரே லைனில் அக்சர் தொடர்ந்து வீசுகிறார்.

பேட்ஸ்மேன்
இதனால்தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினார்கள். அணியில் ஒரு இடதுகை ஸ்பின் பவுலர் இருப்பது எப்போதும் நல்லது. அக்சர் பட்டேல் தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார், என்று கோலி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications