தோனியின் மெகா சாதனை முறியடிப்பு.. ஒரே போட்டியில் தகர்த்து காட்டிய அக்ஷர் பட்டேல்..ரசிகர்கள் வியப்பு
ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் தோனியின் அதிரடி சாதனையை அக்ஷர் பட்டேல் முறியடித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி வெற்றி
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 311/6 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 312 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது. இந்திய அணி 79 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கடைசி நேர அதிரடி
இதன்பின்னர் வந்த அக்ஷர் பட்டேல், இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 35 பந்துகளை சந்தித்த அக்ஷர் பட்டேல் 64 ரன்களை விளாசினார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மெகா சாதனை
இந்நிலையில் தோனியின் முக்கிய சாதனையை அக்ஷர் பட்டேல் முறியடித்துள்ளார். இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், சேஸிங் போது 7வது வீரர் அல்லது அதற்கும் கீழ் களமிறங்கி அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் மிகவும் குறைவாகும். இந்த பட்டியலில் தோனி கடந்த 2005ம் ஆண்டு ஜிம்பாவேவுக்கு எதிராக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனையடுத்து 2011ல் யூசஃப் பதான், 2 முறை இதே சாதனையை சமன் செய்தார்.

முந்திய அக்ஷர் பட்டேல்
ஆனால் தற்போது அக்ஷர் பட்டேல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு, தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2வது அதிவேக அரைசதம் அடித்தவர் அக்ஷர் பட்டேல் தான். 27 பந்துகளில் அவர் தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.


Click it and Unblock the Notifications