Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை காப்பாற்றும் ரட்சகன் அக்சர் பட்டேல்.. பேட்ஸ்மேனக மாறியது எப்படி ? மனம் திறந்து பேட்டி

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது.

இதில் விராட் கோலி 186 ரன்களும் சுப்மன் கில் 128 ரன்களும் எடுத்தனர். இதில் கவனிக்க வேண்டிய இன்னிங்ஸ் அக்சர் பட்டேலுடையது தான்.

113 பந்துகளை எதிர்கொண்ட அவர் 79 ரன்களை சேர்த்தார். அதுவும் விக்கெட்டுகள் விழுந்து தருணத்தில் இக்கட்டான நிலையில் விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

அக்சர் பட்டேல் அபாரம்

அக்சர் பட்டேல் அபாரம்

அக்சபட்டேல் இன்று நான்கு இமாலய சிக்சர்களும் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இந்திய அணியில் அதிக ஸ்ட்ரைக் ரைட்ஸ் வைத்து விளையாடிய வீரர் என்ற பெருமையும் அக்சர் பட்டேலுக்கு கிடைத்தது. அக்சர்பட்டேல் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். டெல்லி டெஸ்டில் அக்சர் பட்டேல் தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியதால் தான் இந்திய அணி வெற்றியை பெற்றது.

கருத்து

கருத்து

இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் குறித்து அக்சர் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார். அணிக்கு என்னுடைய பேட்டிங் மூலம் பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய ஷாட் அடி ரன்களை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் என்னுடைய பேட்டிங் திறமை குறித்து அணி நிர்வாகம் என்னிடம் பேசினார்கள். எனக்கு அணி நிர்வாகம் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று எந்த ரோலும் கொடுக்கவில்லை.

சுலபமாக மாறிவிடும்

சுலபமாக மாறிவிடும்

நான் எவ்வளவு வேகமாக ரன் குவிக்க முடியுமோ அத்தனை வேகமாக அடிக்க வேண்டும் என்று விளையாடினேன். பந்தும் பெரிய அளவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த ஆடுகளத்தில் நீங்கள் கொஞ்சம் நிலைத்து நின்று விளையாடினால் அதன் பிறகு பேட்டிங் மிகவும் சுலபமாக மாறிவிடும்.ஏதேனும் ஒரு பந்து மட்டும் திரும்பியது. மற்றபடி பேட்டிங் செய்ய சுலபமாகவே இருந்தது.

அதிக ரன்கள் பட்டியல்

அதிக ரன்கள் பட்டியல்

நான் முன்பே சொன்னது போல், புதியதாக வரும் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் தடுமாறக்கூடும். ஆனால் ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால், அதன் பிறகு ரன்கள் சேர்ப்பது இங்கு சுலபம்தான் என்று அக்சபட்டேல் கூறியுள்ளார். நான்கு டிஸ்பூட்டிகளில் 5 இன்னிங்ஸில் விளையாடிய அக்சர்பட்டில் மொத்தமாக 264 ரன்கள் அடித்திருக்கிறார் இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும்.

Story first published: Sunday, March 12, 2023, 20:24 [IST]
Other articles published on Mar 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+