Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பகலிரவு போட்டியில 11 விக்கெட் எடுத்த முதல் வீரர் அக்சர்... ஆட்ட நாயகனாக தேர்வு!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் அவர்.

இது இவரது இரண்டாவது டெஸ்ட் போட்டியாக உள்ள நிலையில் 5 விக்கெட் சாதனையை தொடர்ந்து 3வது முறையாக செய்துள்ளார் அக்சர்.

நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி

நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ள முதல் சர்வதேச போட்டி இது. இந்த போட்டி வெறும் 2 தினங்களில் நடந்து முடிந்துள்ளது.

சிறப்பான அக்சர் படேல்

சிறப்பான அக்சர் படேல்

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் முறையே 6 மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஸ்பின்னர் அக்சர் படேல். இது இவரது இரண்டாவது டெஸ்ட் போட்டியாக உள்ள நிலையில் தொடர்ந்து 3 இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாதனையை மேற்கொண்டு ஹாட்ரிக் அடித்துள்ளார்.

அக்சரின் 11 விக்கெட்டுகள்

அக்சரின் 11 விக்கெட்டுகள்

3வது போட்டியில் மட்டும் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அக்சர் படேல் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், பகலிரவு போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பௌலர் என்ற பெருமை அக்சர் படேலுக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறப்பான பௌலிங்

சிறப்பான பௌலிங்

நரேந்திர மோடி மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணியால் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆயினும் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் அக்சர் சிறப்பாக பௌலிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 26, 2021, 10:29 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+