Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துரதிர்ஷ்டம்.. முதலில் தோனி, கோலி இடம் தர மறுத்தார்கள்.. இப்போ ரோஹித்.. உடைந்து போன அக்சர் பட்டேல்

மும்பை : 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதலில் சேர்க்கப்பட்ட அக்சர் பட்டேல், தற்போது அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

இடது கை ஸ்பின்னர் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன் ஆன அக்சர் பட்டேலுக்கு நடந்தது போன்ற மோசமான நிகழ்வு வேறு எந்த வீரருக்கும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் ஆடும் வாய்ப்பை ஒரு முறை இரண்டு முறை அல்ல, மூன்று முறை இழந்திருக்கிறார் அக்சர் பட்டேல்.

Axar Patel didnt get chance in World cup

கேப்டன்கள் மாறினாலும், பயிற்சியாளர் மாறினாலும், தேர்வுக் குழு மாறினாலும் அக்சர் பட்டேலுக்கு மட்டும் இடம் மறுக்கப்பட்டு வருகிறது.

2015 உலகக்கோப்பை : 2015 உலகக்கோப்பை தொடரில் தோனி கேப்டனாக இருந்த போது இளம் வீரராக இருந்த அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அணியில் முதன்மை ஸ்பின்னர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருந்ததால், ஸ்பின் பந்து வீசும் ஆல் - ரவுண்டரான அக்சர் பட்டேல் அவர்களுக்கு மாற்று வீரராக மட்டுமே இருந்தார். அந்த தொடர் முழுவதும் அவருக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2019 உலகக்கோப்பை : அடுத்து 2019 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியில் ஜடேஜாவுக்கு மாற்றாக ஸ்பின் - ஆல் ரவுண்டர் என்ற இடத்தில அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த மாற்று வீரர் என்ற இடமும் கடைசியில் அவருக்கு கிடைக்காமல் போனது.

2023 உலகக்கோப்பை : இரண்டு உலகக்கோப்பை வாய்ப்புகளை அருகில் வந்தும் தவறவிட்ட அக்சர் பட்டேலுக்கு ஜாக்பாட் அடித்தது போல 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம் பெற்றது. ஆனால், அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டதால் தற்போது அவரை நீக்கி இருக்கிறார்கள். அவர் இடத்தை அஸ்வின் பிடித்துக் கொண்டார்.

யார் மீதும் தவறு இல்லை : அக்சர் பட்டேலை தேர்வு செய்யாமல் போனது, போட்டிகளில் ஆடும் வாய்ப்பை அளிக்காமல் போனதற்கு யாரையும் குறை கூற முடியாது. அவரை முன் கூட்டியே இந்திய அணியில் சேர்த்து ஒரீரு ஆண்டுகள் ஆட வைக்காமல், உலகக்கோப்பை தொடர் வரும் போது மட்டும் அவர் நினைவு இந்திய அணி நிர்வாகத்துக்கு வருவது ஏன் என்பதும் புரியவில்லை.

துரதிர்ஷ்டம் : உலகக்கோப்பை வரும் போதெல்லாம் அக்சர் பட்டேல் போன்ற ஒரு வீரர் அணிக்கு கிடைக்க மாட்டார். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என நினைக்கும் இந்திய அணி நிர்வாகம், அவருக்கு முன் கூட்டியே அணியில் இடம் தராதது தான் அவரின் துரதிர்ஷ்டம்.

Story first published: Friday, September 29, 2023, 13:02 [IST]
Other articles published on Sep 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+