Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்!

அகமதாபாத் : இந்தியா -இங்கிலாந்து இடையில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவரும் பகலிரவு போட்டியில் அக்சர் படேலின் மேஜிக் பயணம் தொடர்கிறது.

முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை சொற்ப ரன்களை மட்டுமே கொடுத்து வீழ்த்தினார் அக்சர் படேல்.

தற்போது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை புரிந்துள்ளார்.

இங்கிலாந்து சொதப்பல்

இங்கிலாந்து சொதப்பல்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை முடித்துள்ளன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து ஆடி வருகிறது. 23 ஓவர்களில் 68 ரன்களை மட்டுமே அடித்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.

6 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர்

6 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர்

நேற்று நடைபெற்ற முதல் இன்னிங்சில் ஸ்பின்னர் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார். இது அவருடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியாக உள்ள நிலையில் இரண்டாவது 5 விக்கெட்டுகள் சாதனையை அவர் நிகழ்த்தினார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமை இதன்மூலம் அவருக்கு கிடைத்துள்ளது.

இங்கிலாந்து பரிதவிப்பு

இங்கிலாந்து பரிதவிப்பு

இந்நிலையில் இன்றைய போட்டியில் 28 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் அவர் இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரவி அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணி 80 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

ஹாட்ரிக் அக்சர்

ஹாட்ரிக் அக்சர்

ஷாக் க்ராவ்லி, டாம் சிப்லி என துவக்க வீரர்களை முதலில் பெவிலியனுக்கு ஒடவிட்ட அக்சர் படேல், அடுத்ததாக ஜானி பார்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரையும் திருப்பி அனுப்பினார். இதில் க்ராவ்லி மற்றும் பார்ஸ்டோவை டக் அவுட் ஆக்கியுள்ளார். இன்றைய போட்டியிலும் 5 விக்கெட்டுகள் சாதனையை மேற்கொண்டுல் ஹாட்ரிக் அடித்துள்ளார்.

Story first published: Thursday, February 25, 2021, 18:34 [IST]
Other articles published on Feb 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+