Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு ரன் முன்னிலை.. ஆஸி-யின் கனவுக்கு ஆப்பு வைத்த அஸ்வின் - அக்‌ஷர் ஜோடி.. இது லிஸ்ட்லையே இல்லையே

டெல்லி: இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்றுவிட்டோம் என மகிழ்ச்சியில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு தரமான பதிலடியை கொடுத்துள்ளனர் அக்‌ஷர் - அஸ்வின் ஜோடி.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக செயல்பட்டது.

சீரான விக்கெட்களை இழந்த போதும் அந்த அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 81 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் விளாசினர்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் தொடக்கமே சிறப்பாக அமைந்திருந்தது. முதல் நாளை 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி முடித்த இந்திய அணி 2வது நாளில் 45 ரன்கள் வரை எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாமல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அதன்பின்னர் தான் இந்தியாவுக்கு கண்டம் தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 32 ரன்களுக்கும், கே.எல்.ராகுல் 17 ரன்களுக்கும் வெளியேறினர்.

சரிந்த மிடில் ஆர்டர்

சரிந்த மிடில் ஆர்டர்

இதன் பின்னர் வந்த நட்சத்திர வீரர்கள் சட்டீஸ்வர் புஜாரா (0), ஸ்ரேயாஸ் ஐயர் (4), ஸ்ரீகர் பரத் (6 ) என அடுத்தடுத்து வெளியேறினர். நம்பிக்கை கொடுக்கும் வகையில் விளையாடிய விராட் கோலி 44 ரன்களை அடித்து மிக வலுவாக இருந்த நிலையில் அம்பயரின் தவறான முடிவால் எல்.பி.டபள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி 139 ரன்களுக்கெல்லாம் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

124 ரன்கள் முன்னிலையுடன் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் அக்‌ஷர் பட்டேல் - அஸ்வின் ஜோடி. 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அவர்கள் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பவுண்டரிகளை அடித்து பிரிக்க முடியாத பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் விழிப்பிதுங்கி நின்றனர்.

 1 ரன் தான் முன்னிலை

1 ரன் தான் முன்னிலை

இவர்கள் இருவரும் மட்டும் சேர்ந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதனால் இந்திய அணி அசால்ட்டாக 262 ரன்களை குவித்துவிட்டது. அதிக முன்னிலை பெற்றுவிட மாட்டோமா என்று நினைத்த ஆஸ்திரேலியாவுக்கு வெறும் 1 ரன் மட்டுமே முன்னிலை கிடைத்தது. சிறப்பாக விளையாடிய அக்‌ஷர் பட்டேல் 74 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களையும் அடித்தனர்.

Story first published: Saturday, February 18, 2023, 16:45 [IST]
Other articles published on Feb 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+