Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்ன ஒரு குசும்புத்தனம்”.. அக்‌ஷர் - ஜடேஜாவை வைத்து அஸ்வின் செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படம்!

மும்பை: அக்‌ஷர் படேல் மற்றும் ஜடேஜாவை வைத்து ரவிச்சந்திரன் செய்துள்ள குசும்பு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Ashwin அபார சாதனை! Kumble, Harbhajan Record முறியடிக்கப்பட்டது | OneIndia Tamil

இந்தியா வந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற நிலையில் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் கடைசி வரை விடாப்பிடியாக போராடியதால் சமனில் முடிவடைந்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் சுதாரித்துக்கொண்ட இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 372 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியைப் பெற்றது. மேலும் 1-0 என தொடரைக் கைப்பற்றியது.

அறிய நிகழ்வுகள்

அறிய நிகழ்வுகள்

இந்த டெஸ்ட் தொடரில் தான் பல அறிய விஷயங்கள் நடைபெற்றன. முதலில் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு மொத்தம் 4 கேப்டன்கள் செயல்பட்டது பேசப்பட்டது. பின்னர் இந்த தொடரில் பங்கேற்ற மொத்தம் 4 வீரர்கள் கிட்டதட்ட ஒரே பெயர் கொண்டவர்களாக இருந்தனர். இந்தியாவின் ஸ்பின்னர்கள் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜாவும், நியூசிலாந்து ஸ்பின்னர்கள் அஜாஸ் படேல், ராசின் ரவீந்திரா ஆகியோரும்தான் அவர்கள்.

அஸ்வின் குறும்பு

அஸ்வின் குறும்பு

இதனை வைத்து வித்தியாசமாக யோசித்த ரவிச்சந்திரன் அஸ்வின், 4 வீரர்களையும் ஒருவருக்கு ஒருவர் அருகில் நிற்கவைத்துள்ளார். அதில் அக்சர் படேல் தனது ஜெர்ஸியில் அக்சர் என்றும், அஜாஸ் படேல், படேல் என்றும் எழுதியிருக்கிறார். இது அக்சர் படேல் என்ற பெயரைக் கொடுக்கிறது. அடுத்து ரச்சின் ரவீந்திரா தனது ஜெர்ஸியில் ரவீந்திரா என்றும் ரவீந்திர ஜடேஜா, ஜடேஜா என்றும் ஜெர்ஸியில் பெயர் போட்டுள்ளார். இது ரவீந்திர ஜடேஜா என்ற பெயரை குறிக்கிறது.

அஸ்வின் ட்வீட்

அஸ்வின் ட்வீட்

இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், உலக சாம்பியன் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளோம். அதுவும் வான்கடேவில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் மற்றும் அஜாஸ் பட்டேல் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என பாராட்டியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Story first published: Monday, December 6, 2021, 22:39 [IST]
Other articles published on Dec 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+