Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலையில் ஓடி வந்த வீரர்.. போட்டிக்கு 2 மணி நேரத்திற்கு முன் நீக்கப்பட்ட அக்சர் பட்டேல்.. பேட் நியூஸ்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அக்சர் பட்டேல் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு உள்ளார் .

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்று காலை தொடங்க உள்ளது. சென்னையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று நடக்கும்.

இதற்கான உத்தேச அணி விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணி ஸ்பின் பவுலர்களை நம்பி இன்று களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பின்

ஸ்பின்

சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங் செய்ய வசதியான பிட்ச் ஆகும். இதனால் இங்கு மூன்று ஸ்பின் பவுலர்கள் உடன் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஸ்பின் பவுலர்களுக்கு ஏற்றபடி பிட்ச் மாற்றப்பட்டுள்ள்ளது.

பிட்ச்

பிட்ச்

இந்திய அணி அறிவித்த அணியில் மொத்தம் 4 ஸ்பின் பவுலர்கள் இருந்தனர். அஸ்வின், அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் மூன்று பேருக்கு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

இந்த நிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேல் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது. இவர் பேட்டிங்கும் நன்றாக செய்வார் என்பதால் கண்டிப்பாக அக்சர் பட்டேல் அணியில் இடம்பெறுவர் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காலையில் சொன்னார்

காலையில் சொன்னார்

தனக்கு கையிலும், தோளிலும் வலி இருப்பதாக அக்சர் பட்டேல் கூறியுள்ளார். இன்று காலைதான் தனக்கு வலி இருக்கிறது என்று அக்சர் பட்டேல் கூறியுள்ளார். இதனால் 2 மணி நேரத்திற்கு முன் அணியில் இருந்து இவரை நீக்கி உள்ளனர். முதல் போட்டியில் இருந்து இவரை நீக்கி உள்ள நிலையில் மீதம் உள்ள போட்டியில் இவர் ஆடுவாரா என்று கேள்வி உள்ளது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இவருக்கு பதிலாக அணிக்குள் மாற்று வீரராக ராகுல் சாகர் மற்றும் சபாஷ் நதீம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். சாபஷ் நதீம் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு ஆடும் வீரர். ராகுல் சாகர் மும்பை அணியில் ஆடும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 5, 2021, 8:33 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+