
கடினமான இலக்கு
அந்த அணியின் ஓப்பனிங் வீரர்கள் சாய் ஹோப் 115 ரன்களும், கெயில் மேயர்ஸ் 39 ரன்கள் அடித்தும் அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தனர். இதன் பின் வந்த 2 வீரர்கள், சொதப்ப 130 /3 என்ற நிலைக்கு வெஸ்ட் இண்டீஸ் சென்றது. எனினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிகோலஸ் பூரண் ஆட்டத்தை மாற்றினார். 77 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்தார். இதனால் 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி இன்னிங்ஸ்
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷிகர் தவான் இந்த போட்டியில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 43 ரன்கள் குவித்து கேட்ச் கொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 9 ரன்களுக்கெல்லாம் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

மிடில் ஆர்டர் சிறப்பு
இதனால் இந்திய அணி 79 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சன் ஜோடி அணியை மீட்டனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் 63 ரன்களும், சஞ்சு சாம்சன் 54 ரன்களும் எடுத்து வெளியேறினர். சஞ்சு சாம்சன் காட்டிய அதிரடிக்கு சதம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் துரதிஷ்வசமாக ரன் அவுட்டானார்.

அக்ஷர் தந்த ட்விஸ்ட்
இந்திய அணிக்கு கடைசி 74 பந்துகளில் 114 ரன்கள் தேவை, ஆனால் 5 முக்கிய விக்கெட்களும் சென்றுவிட்டன. இப்படிபட்ட சூழலில் தான் அக்ஷர் பட்டேல் ஆட்டத்தில் பெரிய ட்விஸ்ட் கொடுத்தார். அடுத்தடுத்து அவர் விளாசிய சிக்ஸர்களால் இந்திய அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. 35 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 64 ரன்களை குவித்தார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடா 33 ரன்களை சேர்த்தார்.

தொடர் வெற்றி
இதனால் இந்திய அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 வெற்றிகளுடன் கைப்பற்றியுள்ளது. சிறப்பாக விளையாடிய அக்ஷர் பட்டேலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











