Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA தொடரில் உங்கள் இடத்தை ஜடேஜா பிடித்ததால் கோபமா? அக்சர் பட்டேல் பளீச் பதில்

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக இடம் பெறாமல் போனது மிகவும் ஏமாற்றத்தை கொடுத்ததாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேல் தெரிவித்திருக்கிறார்.

உலகக்கோப்பை தொடரில் அக்சர பட்டேல் முதலில் இடம்பெற்றார். ஆனால் காயம் காரணமாக கடைசி நேரத்தில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 யில் அக்சபட்டேல் 19 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Axar Patel speaks about loosing his spot in world cup and SA T20 series

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்சர் பட்டேல், இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெற்றது. ஆனால் எனக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டது. முதல் சில நாட்கள் நான் அதைப் பற்றிய யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் அணி நன்றாக விளையாடியது நினைத்து மகிழ்ச்சி கொண்டேன். பத்து நாட்களுக்குப் பிறகு என்னுடைய பயிற்சியை தொடங்கினேன்.

முதல் அந்த பத்து நாட்களுக்கு என்னால் எதையுமே செய்ய முடியவில்லை. வாய்ப்பை வீணடித்து விட்டோமே என்ற எண்ணம் தான் மேலோங்கியது. அதன் பிறகு தான் என்னுடைய அன்றாட வாழ்க்கைக்கு நான் திரும்பினேன். காயத்தால் தான் என்னால் இடம் பெற முடியாமல் போனது. அது நமது கையில் இல்லை. விளையாட்டில் அது ஒரு பகுதி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீங்கள் விலகி கொஞ்ச நாள் பிறகு அணிக்கு திரும்பினால் உங்களுடைய திறமையை மீண்டும் நிரூபித்தாக வேண்டும்.

உங்கள் உடல் தகுதியை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மீண்டும் காயமடையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்த ஒன்றரை மாதமாக நான் போட்ட உழைப்புக்கு தற்போது நான் அறுவடை செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த டி20 உலக கோப்பை போட்டிக்கு முன் இந்தியா பெரிய அளவில் டி20 போட்டிகளில் விளையாட வில்லை. வெறும் ஒன்பது பத்து ஆட்டங்களால் விளையாடுகிறது.

எனவே இதனை வைத்து தான் நாம் அந்த உலக கோப்பைக்கு தயாராக வேண்டும்.தற்போது டி20 போட்டியில் உங்களுக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்திய அணி நிர்வாகம் விளக்கி விட்டது. தென்னாப்பிரிக்க தொடருக்கான டி20 அணியில் தாங்கள் சேர்க்கப்படாதது குறித்து வருத்தமா என கேள்வி கேட்கப்பட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் எப்போதும் போல்தான் இருக்கிறேன். என்னுடைய பந்துவீச்சும் நான் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று அக்சர் பட்டேல் பதில் கூறியுள்ளார்.

Story first published: Saturday, December 2, 2023, 23:33 [IST]
Other articles published on Dec 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+