
இந்தியாவின் நிலை
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்ததால் தோற்றுவிடும் என்றே ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் விராட் கோலி ஒற்றை ஆளாக போராடி த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். குறிப்பாக கடைசி பந்தில் அஸ்வின் சிங்கிள் அடித்த பிறகு தான் ரசிகர்களுக்கு நிம்மதியே கிடைத்தது.

நெதர்லாந்து போட்டி
இதே போல நெதர்லாந்து அணியுடனான போட்டியில் விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் ஜோடி அட்டகாசமாக ரன் குவித்ததால் வெற்றி கண்டது. இதனையடுத்து இந்தியா தனது 3வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. அந்த அணியில் தற்போது நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசை இருப்பதால் இந்தியாவுக்கு பெரும் சவால் காத்துள்ளது.

அக்ஷர் விளக்கம்
இந்நிலையில் இந்திய அணியின் திட்டம் குறித்து அக்ஷர் பட்டேல் பேசியுள்ளார். அதில், நாங்கள் எந்தவித பதற்றமும், பயமும் இல்லாமல் சகஜமாக விளையாட வேண்டும் என்பதே நிர்வாகம் கொடுத்த அட்வைஸ். ரபாடா, நார்ட்ஜே போன்று அதிக பவுன்ஸ் வீசுபவர்களை கண்டு அஞ்சக்கூடாது. எங்களின் ஃபார்ம் மற்றும் நம்பிக்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

இடதுகை வீரர்கள்
தென்னாப்பிரிக்க அணியில் அதிகப்படியாக இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களை எப்படி சமாளிப்பீர்கள் என்ற கேள்விக்கு அக்ஷர் பதிலளித்தார். அதில், அடுத்த போட்டி குறித்தும், இடதுகை வீரர்களின் சவால் குறித்தும் எனக்கு கவலையே இல்லை. முதலில் போட்டிக்கு செல்வோம், என்ன தேவையோ அதை கண்டிப்பாக செய்வோம் எனக்கூறினார்.

எப்போது போட்டி
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் அக்டோபர் 30ம் தேதியன்று நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரத்தில் இந்த போட்டி நடைபெறும் என்றும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் கூட கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications