Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்‌ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு

குஜராத்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான அக்‌ஷர் பட்டேல் யாருக்கும் தெரியாமல் மிகவும் சைலண்டாக தனது திருமணத்தை நடத்தி வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான 50 ஓவர் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள சூழலில் அடுத்ததாக டி20 தொடரில் மோதுவதற்கு தயாராக உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வு தரப்பட்டுள்ளது.

இந்த ஓய்வுகளை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ள வீரர்கள், தங்களின் திருமணத்தை செய்து வருகின்றனர். அந்தவகையில் தான் கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்தது.

ராகுலின் திருமணம்

ராகுலின் திருமணம்

பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் தான் ஆதியா ஷெட்டி. இவர்களின் திருமணம் கடந்த ஜனவரி 23ம் தேதியன்று மும்பையில் உள்ள காண்டாலா பங்களாவில் கோலாகலமாக நடைபெற்றது. நியூசிலாந்து தொடர் காரணமாக பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை. எனினும் தோனி 80 லட்சம் மதிப்புள்ள பைக்கும், விராட் கோலி - அனுஷ்கா ஜோடி ரூ.2.7 கோடி உள்ள காரையும் பரிசாக வழங்கினர்.

அக்‌ஷர் பட்டேல் திருமணம்

அக்‌ஷர் பட்டேல் திருமணம்

இந்நிலையில் மற்றொரு நட்சத்திர வீரரான அக்‌ஷர் பட்டேல் யாருக்கும் தெரியாமல் சைலண்டாக திருமணத்தை நடத்தி வருகிறார். அக்‌ஷர் பட்டேலுக்கும் - மேகா என்பவருக்கும் குஜராத்தில் உள்ள நாடியட் பகுதியில் திருமணம் நடைபெறுகிறது. மேகா ஊட்டச்சத்து மருத்துவராக பணியாற்றி வருகிறார். Dt.Meha என்ற பெயரில் சமூக வலைதளங்களில் மருத்துவ ஆலோசனைக்கூறும் நிறுவனம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.

4 நாள் நிகழ்ச்சிகள்

4 நாள் நிகழ்ச்சிகள்

இவர்கள் இருவருக்கும் நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்று இருவரும் கரம் பிடிக்கிறார்கள். குஜராத் மாநில முறைப்படி 3 - 4 நாட்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் எனத்தெரிகிறது. நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர்.

யார்? யார்? பங்கேற்பு

யார்? யார்? பங்கேற்பு

சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, அஸ்வின் உள்ளிட்ட பல வீரர்கள் தற்போது ஓய்வில் தான் இருக்கிறார்கள். நியூசிலாந்துடன் டி20 தொடர் தான் என்பதால் இவர்கள் ஓய்வில் உள்ளனர். எனவே திருமண நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Thursday, January 26, 2023, 15:18 [IST]
Other articles published on Jan 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+