கதையை முடிக்கும் துருப்பு சீட்டு.. இந்திய அணி களமிறக்கும் X பேக்டர்.. சென்னையில் திக்திக் பிளானிங்!
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இளம் வீரர் ஒருவரை துருப்பு சீட்டாக பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 300 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி அதிக ரன்களை எடுக்க வாய்ப்புள்ளது.
ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 161 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார். ரஹானே 67 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார்.

எப்படி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இளம் வீரர் ஒருவரை துருப்பு சீட்டாக பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்ற பிட்சாக மாறியுள்ளது. முதல் நாள் ஆட்டத்திலேயே பிட்ச் நல்ல கடினமாக இருந்தது. நன்றாக ஸ்விங் ஆனது.

ரோஹித்
ஆனால் இப்படிப்பட்ட பிட்சிலும் கூட ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு 161 ரன்கள் எடுத்தார். இன்றுக்கு பிட்ச் இன்னும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பிட்ச் இன்று இன்னும் மோசமாக ஸ்விங் ஆகும். அதேபோல் நன்றாக பவுன்சும் ஆகும்.

பவுன்ஸ்
சென்னை பிட்சில் நன்றாக பவுன்ஸ் செய்து ஸ்பின் பவுலிங் செய்ய கூடிய வீரர்கள் இன்று விக்கெட் எடுக்க முடியும். அதேபோல் பந்தை வேகமாக வீச வேண்டும். இதில் அஸ்வின் பெரிய அளவில் பவுன்ஸ் செய்யாமல் பவுலிங் செய்ய கூடியவர். சுந்தர் மற்றும் அக்சர் இருவரும் பந்தை அதிக அளவில் பவுன்ஸ் செய்து வேகமாக ஸ்பின் பவுலிங் செய்வார்கள்.

பவுலிங்
தற்போது சுந்தர் இந்திய அணியில் இல்லை. இதனால் அக்சர் பட்டேல்தான் இன்றைய போட்டியில் இந்திய அணி பயன்படுத்த போகும் எக்ஸ் பேக்ட்ராக இருப்பார் என்று கூறப்படுகிறது. அக்சர் பட்டேல்தான் ஆட்டத்தை மாற்ற போகும் வீரராக இருப்பார். இரண்டு அணிக்கும் இடையில் இவர்தான் வேறுபாடாக இருப்பார்.

வேறுபாடு
இவர் பவுலிங்கில்தான் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் சரியும் என்று கோலி நம்புகிறார். இதனால்தான் முதல் போட்டியில் நன்றாக ஆடியும் கூட நேரடியாக வாஷிங்க்டன் சுந்தரை கோலி களமிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இன்று அக்சர் பட்டேலை இந்திய அணி அதிகம் நம்பும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications