Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அக்‌ஷர் பட்டேல் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 3 - 1 என்ற கணக்கில் வென்றது. இதில் அறிமுக வீரர் அக்‌ஷர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டார்.

இந்நிலையில் இதுவரை எந்த இந்தியரும் செய்திராத வரலாற்று சாதனையை அக்‌ஷர் பட்டேல் செய்துள்ளார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் அடித்த நிலையில் இந்தியா 365 ரன்கள் எடுத்து 160 ரன்கள் முன்னிலை வகித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 2 வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டதால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றியது.

ஸ்பின்னர்கள்

ஸ்பின்னர்கள்

இந்த தொடர் முழுவதும் ஸ்பின்னர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 4வது டெஸ்டில் அஷ்வின் மற்றும் அக்‌ஷரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான அக்‌ஷர் 4வது டெஸ்டில் 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

அக்‌ஷர் பட்டேல்

அக்‌ஷர் பட்டேல்

சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் அறிமுகமான அக்‌ஷர் பட்டேல் அதில் 2/40 மற்றும் 5/60, 3வது டெஸ்டில் 6/38, மற்றும் 5/32 என அசத்தினார். அதே போல் 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டும் கைப்பற்றி மிரட்டியுள்ளார். இந்த தொடரில் அவரின் மொத்த விக்கெட் 27 ஆகும்

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

அக்‌ஷர் பட்டேல் அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்தியர் என்ற புது சாதனை படைத்தார். இவர் இதற்கு முன்னர் (27 விக்கெட்) எடுத்திருந்த திலீப் ஜோசியின் சாதனையை சமன் செய்தார். ஜோசி கடந்த 1979/80 இல் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Story first published: Saturday, March 6, 2021, 19:24 [IST]
Other articles published on Mar 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+