Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

19 வயது ஆயுஷ்-க்கு துணை கேப்டன் பதவி.. சூர்யகுமாருக்கு அணியிலேயே இடமில்லை.. மும்பை அணி ட்விஸ்ட்

மும்பை: 2026-27 சீசன் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில், 19 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் மூத்த வீரர் சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து அதிரடியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார். தனக்கு வாய்ப்பு வேண்டும் என சூர்யகுமார் யாதவ் கேட்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ள 16 வீரர்கள் கொண்ட ரஞ்சி அணிக்கு அனுபவ பேட்டர் சித்தேஷ் லாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 13 முதல்தர போட்டிகளில் விளையாடி 660 ரன்கள் சேர்த்துள்ள 19 வயதான தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரேக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நட்சத்திரங்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் முஷீர் கான் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஜெய்ஸ்வால், சர்பராஸ் கானை தாண்டி ஆயுஷ் மாத்ரேவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டு இருப்பதும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ayush Mhatre Named Mumbai Vice-Captain for Ranji Trophy as Suryakumar Yadav Gets Omitted

இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டனான சூர்யகுமார் யாதவ், நடப்பு ரஞ்சி சீசன் முழுவதும் விளையாடத் தயார் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்வுக்குழு அவரை அணியில் சேர்க்காமல் அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து மும்பை தலைமைத் தேர்வாளர் ராஜேஷ் பவார் கூறுகையில், "எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மூத்த வீரர்களை விட இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. சூர்யகுமார் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக கடைசியாக 2025 பிப்ரவரியில் விதர்பா அணிக்கு எதிராக முதல்தர போட்டியில் விளையாடினார். இதற்கிடையே பயிற்சியின் போது கையில் பலத்த காயம் அடைந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பெறவில்லை. ஷர்துல் தாக்கூர் காயம் அடையாமல் இருந்தால் அவரே மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சனுக்கு கல்தா? அர்ஷ்தீப் உள்ளே.. வெஸ்ட் இண்டீஸ் டி20யில் அடியோடு மாறப் போகும் இந்திய அணி

சஞ்சு சாம்சனுக்கு கல்தா? அர்ஷ்தீப் உள்ளே.. வெஸ்ட் இண்டீஸ் டி20யில் அடியோடு மாறப் போகும் இந்திய அணி

ரஞ்சி தொடரில் விளையாட ஆர்வமாக இருந்த சூர்யகுமார் யாதவை மும்பை அணி கழற்றிவிட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியிலும் இடமில்லை, மும்பை அணியிலும் இடமில்லை என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, October 6, 2026, 8:57 [IST]
Other articles published on Oct 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+