Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சையது முஷ்டாக் அலி தொடரில் சூர்யகுமாரை வேடிக்கை பார்க்கவிட்டு மிரள வைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மத்ரே

லக்னோ: இந்திய அண்டர்-19 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே. மூத்த வீரர்களான சூர்யகுமார் யாதவ், சிவம் துபே ஆகியோர் களத்தில் இருக்கும்போதே, அவர்களை வேடிக்கை பார்க்க விட்டு, தனி ஆளாக நின்று சதம் விளாசி மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார் 18 வயது சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மத்ரே.

லக்னோவில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

Ayush Mhatre Smashes Century in 53 Balls After Being Named India U-19 Captain Suryakumar Yadav Impressed

193 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு, இளம் வீரர் ஆயுஷ் மத்ரே தொடக்கம் முதலே வானவேடிக்கை காட்டினார். விதர்பா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ரன்களைக் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 8 இமாலய சிக்ஸர்களும் அடங்கும். இவரது ஸ்ட்ரைக் ரேட் 207.55 ஆக இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு முனையில் ஆயுஷ் மத்ரே வெளுத்து வாங்க, மறுமுனையில் அனுபவ வீரர் சூர்யகுமார் யாதவ் 35 ரன்கள் மற்றும் சிவம் துபே 39 ரன்கள் எடுத்தனர். கேப்டன் அஜிங்க்யா ரஹானே 'டக் அவுட்' ஆகி ஏமாற்றினாலும், ஆயுஷ் மத்ரேவின் அசுரத்தனமான ஆட்டத்தால் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிசிசிஐ கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 27, 2025) அன்று தான், டிசம்பர் மாதம் துபாயில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. அந்த அணிக்குக் கேப்டனாக ஆயுஷ் மத்ரே நியமிக்கப்பட்டார். கேப்டன் பதவி கிடைத்த மகிழ்ச்சியை, அடுத்த சில மணி நேரங்களிலேயே சதமாக மாற்றித் தனது தகுதியை நிரூபித்துள்ளார்.

அதேவேளையில், கொல்கத்தாவில் நடந்த மற்றொரு போட்டியில் பீகார் அணிக்காக விளையாடிய மற்றொரு இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றமளித்தார். இவரும் அண்டர்-19 ஆசியக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் 9 பந்துகளைச் சந்தித்த அவர், 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பீகார் அணி இந்தப் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அண்டர்-19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி:

ஆயுஷ் மத்ரே (கேப்டன்)
வைபவ் சூர்யவன்ஷி
விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்)
வேதாந்த் திரிவேதி
அபிகியான் குண்டு (விக்கெட் கீப்பர்)
ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்)
யுவராஜ் கோஹில்
கனிஷ்க் சௌஹான்
கிலான் படேல்
நமன் புஷ்பக்
டி. தீபேஷ்
ஹெனில் படேல்
உத்தவ் மோகன்
ஆரோன் ஜார்ஜ்
கிஷன் குமார் சிங்

Story first published: Friday, November 28, 2025, 18:29 [IST]
Other articles published on Nov 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+