Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் வீரர்... என்னடா இது வம்பா போச்சு

ஓல்ட் ட்ரபோர்ட் : பாகிஸ்தான் -இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இறுதி மற்றும் 3வது டெஸ்ட் தொடர் வரும் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ளது.

இதையடுத்து வரும் 28ம் தேதி இரு அணிகளுக்கிடையிலான சர்வதேச டி20 தொடர் துவங்கவுள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் துணை பௌலிங் கோச்சாக முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளர் அசார் மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை 3வது போட்டி

வெள்ளிக்கிழமை 3வது போட்டி

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக டிராவில் முடிந்துள்ளது. இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை 3வது மற்றும் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

வரும் 28ம் தேதி துவக்கம்

வரும் 28ம் தேதி துவக்கம்

இதையடுத்து இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் வரும் 28ம் தேதி துவங்கவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இந்த டி20 தொடரில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், புதிய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் வீரர் நியமனம்

முன்னாள் பாகிஸ்தான் வீரர் நியமனம்

இதனிடையே, மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெறவுள்ள இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னாள் பாகிஸ்தான் பௌலர் அசார் மஹ்மூத் துணை பௌலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து பௌலிங் கோச் ஜான் லீவிசிற்கு இவர் பௌலிங் பயிற்சிகளில் உதவி புரிவார்.

இயான் மார்கன் கேப்டன்

இயான் மார்கன் கேப்டன்

இதனிடையே, டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் இயான் மார்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டாம் பேன்டன், சாம் பில்லிங்ஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் 14 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வீரர்களாக பாட் பிரவுன், லியாம் லிவ்விங்ஸ்டோன், ரீஸ் டாப்லி போன்றவர்களும் உள்ளனர்.

Story first published: Wednesday, August 19, 2020, 10:41 [IST]
Other articles published on Aug 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+