For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் அணியில் இடம் வேண்டுமா?50,60 ரன்கள் அடித்தால் வேலைக்கு ஆகாது..இளம் வீரருக்கு அசாரூதீன் அட்வைஸ்

ஐதராபாத்: இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் 50, 60 ரன்கள் அடித்தால் வேலைக்கே ஆகாது என்று முன்னாள் கேப்டன் அசாரூதீன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறது.

7 பந்தில் மாறிய ஆட்டம்..! புவின்னா ஃபயரு..! கடைசி நேரத்தில் பதறிய மும்பை.. தப்பித்த ஐதராபாத்7 பந்தில் மாறிய ஆட்டம்..! புவின்னா ஃபயரு..! கடைசி நேரத்தில் பதறிய மும்பை.. தப்பித்த ஐதராபாத்

இதில் இந்திய அணி யின் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

புஜாரா ஃபார்ம்க்கு திரும்பியுள்ளதால், அவரது இடம் உறுதி. இதனால் ரஹானேக்கு பதில் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைக்குமா, இல்லை ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் விஹாரி கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் இன்னிங்சில் 31, 35 மற்றும் 58 ரன்கள் அடித்திருந்தார்.

அசாரூதீன் அட்வைஸ்

அசாரூதீன் அட்வைஸ்

இது குறித்து பேசிய அசாரூதீன், ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியில் இடம் வேண்டம் என்றால், அவருக்கு கிடைக்கும் வாய்ப்பில் சதம் அடிக்க வேண்டும். 50 ரன்கள், 60 ரன்கள் அடித்துவிட்டு ஆட்டமிழந்தால், நிச்சயம் வேலைக்கே ஆகாது. ஹனுமா விஹாரி ஒரு சிறந்த வீரர்.

பெரிய ஸ்கோர்

பெரிய ஸ்கோர்

இந்திய அணிக்காக நிறைய விளையாட வேண்டும் என்றால், தொடர்ந்து பெரிய ஸ்கோர்களை அடிக்க வேண்டும் என்று அசாரூதீன் தெரிவித்துள்ளார். விஹாரி 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அறிமுக போட்டியில் விஹாரி அரைசதம் அடித்தார்.

15 டெஸ்ட் போட்டி

15 டெஸ்ட் போட்டி

இந்த 4 ஆண்டுகளில் விஹாரி வெறும் 15 டெஸ்ட் போட்டியில் தான் இந்தியாவுக்காக களமிறங்கினார். இதில் 808 ரன்கள் அடித்துள்ளார். இதில் 5 அரைசதங்களும், ஒரு சதம் மட்டுமே அடங்கும். ஆஸ்திரேலியாவில் ஒரு முறை தொடக்க வீரராக 2018 மெல்போர்ன் டெஸ்டில் களமிறங்கிய விஹாரி, 66 பந்துகளில் 8 ரன்கள் அடித்தார். இதே போன்று 2020 ஆம் ஆண்டு அதே ஆஸ்திரேலியாவில் அஸ்வினுடன் இணைந்து போட்டியை டிரா செய்தார்.

Story first published: Friday, June 3, 2022, 14:48 [IST]
Other articles published on Jun 3, 2022
English summary
Azharuddin special advise to hanuma vihari to keep the place in test team டெஸ்ட் அணியில் இடம் வேண்டுமா?50,60 ரன்கள் அடித்தால் வேலைக்கு ஆகாது..இளம் வீரருக்கு அசாரூதீன் அட்வைஸ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X