Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட கடவுளே! ஜடேஜாவின் அதிரடி சிக்ஸ்சர்கள்... சாக்ஷி தோனி ஆச்சர்யம்

துபாய் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் கேகேஆருக்கு எதிரான சிஎஸ்கேவின் 6 விக்கெட்டுகள் வெற்றிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர்.

11 பந்துகளில் 31 ரன்களை குவித்த ரவீந்திர ஜடேஜா, இறுதி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து அடித்த 2 சிக்ஸர்களே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

இந்நிலையில் ஜடேஜாவின் இந்த அதிரடி சிக்ஸர்களால் ஆச்சர்யத்திற்கு உள்ளான சாக்ஷி தோனி, அவருடைய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இந்தியில் தன்னுடைய ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜடேஜாவின் அதிரடி சிக்ஸர்கள்

ஜடேஜாவின் அதிரடி சிக்ஸர்கள்

நேற்றைய ஐபிஎல்லின் 49வது லீக் போட்டியில் கேகேஆர் அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்களை குவித்த போதிலும் இறுதி இரண்டு பந்துகளில் ஜடேஜா அடித்த அடுத்தடுத்த 2 சிக்ஸ்களே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

இன்ஸ்டாவில் ஆச்சர்ய பகிர்வு

இன்ஸ்டாவில் ஆச்சர்ய பகிர்வு

இந்நிலையில் ஜடேஜாவின் இந்த அதிரடி சிக்ஸ்களால் ஆச்சர்யத்திற்கு உள்ளான தோனியின் மனைவி சாக்ஷி தோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு அட கடவுளே என்று இந்தியில் கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.

கொண்டாடிய ஜடேஜா

கொண்டாடிய ஜடேஜா

நேற்றைய ஜடேஜாவின் 11 பந்துகளில் 31 ரன்கள் அதிரடி அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து அவர் தன்னுடைய ஸ்டைலில் தன்னுடைய கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இந்த வெற்றி சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜடேஜா விளக்கம்

ஜடேஜா விளக்கம்

இந்நிலையில், தான் நெட் பயிற்சியின்போது சிறப்பாக பயிற்சி மேற்கொண்டதாகவும், அதை போட்டியின்போது பிரயோகிக்க முடியும் என்று நம்பியதாகவும் ஜடேஜா வெற்றிக்கு பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தன்னிடம் வந்த பந்தை மட்டுமே கருத்தில் கொண்டு தான் சிக்ஸ்களை அடிக்க முற்பட்டதாகவும் அவர் கூறினார்.

Story first published: Friday, October 30, 2020, 9:56 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+