For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை - தோனியின் சாதனையை உடைக்க போகும் பாபர் அசாம்.. பக்கத்தில் நெருங்கிய வில்லியம்சன்

மெல்போர்ன் : டி20 உலக கோப்பையில் தோனியின் மகத்தான சாதனையை பாபர் அசாம், வில்லியம்சன் ஆகியோர் முறியடிக்க உள்ளனர்.

ஆடவருக்கான 8வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. இதில் பிரதான சுற்றான சூப்பர் 12 நேற்று முதல் தொடங்கியது .

இதில் போட்டியில் நடத்தும் ஆஸ்திரேலியா அணியை நியூசிலாந்து வீழ்த்தியது. இன்று அனைவரும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

பாபர் அசாம் சாதனை

பாபர் அசாம் சாதனை

இந்த நிலையில் பாபர் அசாம், வில்லியம்சன் ஆகியோர் தோனியின் மகத்தான சாதனையை உடைக்க உள்ளனர். பாபர் அசாம், 2021 டி20 உலக கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்த தொடரில் அவர் 33 ரன்கள் விளாசினார். சராசரியாக 60 ரன்கள் எடுத்திருந்தார்.

வாய்ப்பு

வாய்ப்பு

அதில் நான்கு அரை சதம் அடங்கும். இதன் மூலம் ஒரு தொடரில் அதிக ரன் விளாசிய கேப்டன் என்ற பெருமையை அவர் படைத்திருந்தார். இதற்கு முன்பு ஜெயவர்த்தனே 2012 ஆம் உலகக் கோப்பை போட்டியின் போது இந்த சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை பாபர் அசாம், வில்லியம்சன் ஆகியோர் உடைக்க வாய்ப்பு உள்ளது.

தோனி முதலிடம்

தோனி முதலிடம்

2007 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை டி20 உலக கோப்பையில் 33 ஆட்டங்களில் இந்திய அணியின் கேப்டனாக தோனி விளையாடினார். இதில் அவர் 529 ரன்கள் அடித்திருந்தார். டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்று பெருமையை தோனி இன்று வரை வகித்து வருகிறார். இந்த பட்டியலில் வில்லியம்சன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் தோனியை விட 168 ரன்கள் குறைவாக இருக்கிறார்.

முறியடிக்கலாம்

முறியடிக்கலாம்

தற்போது இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் பாபர் அசாம் தோனியை விட 226 ரன்கள் குறைவாக இருக்கிறார். இந்த தொடரில் குறைந்தபட்சம் இரு வீரர்களும் ஐந்து போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது.இதனால் தோனியின் சாதனையை இந்த உலகக் கோப்பையில் இவ்விருவரும் உடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே அனைத்து t20 உலக கோப்பையிலும் விளையாடிய வீரர்கள் என்ற சாதனையை ரோகித் சர்மாவும் வங்கதேச வீரர் ஷாகிபுல் ஹசன் படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 23, 2022, 12:53 [IST]
Other articles published on Oct 23, 2022
English summary
Babar Azam and Kane williamson might break dhoni biggest record in t20 world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+