Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சி.. குண்டை தூக்கி போட்ட பாபர் அசாம்

Babar azam : கிரிக்கெட் உலகில் மிக சிறந்த வீரர்களில் ஒருவராக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு விளையாடிய சில காலத்திலேயே பல சாதனைகளை பாபர் அசாம் படைத்திருக்கிறார். இந்த நிலையில் கேப்டனாக இருந்த பாபர் அசாம் தற்போது அந்தப் பதவியில் இருந்து விலகி விட்டார்.

எனினும் 29 வயதான பாபர் அசாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது குறித்து பாபர் அசாம் , நண்பரும் பிரபல கிரிக்கெட் வீரருமான முகமது ரிஸ்வான் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

Babar azam and mohammed rizwan conversation about marriage attracts fans javi

இதற்கு பதில் அளித்த பாபர் அசாம், எனக்கு தெரியும் நீ இந்த கேள்வியை தொடர்ந்து கேட்பீர்கள் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த ரிஸ்வான், அது மட்டும் சரி தற்போது நான் இந்த கேள்வியை கேட்டு விட்டேன். இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறினார். அதற்கு பாபர் அசாம், இதற்கான பதிலை நான் உன்னிடம் தனிப்பட்ட முறையில் புரிய வைக்கிறேன். இதற்கு இல்லை முடியாது என்னுடைய மனைவி எப்போதுமே இந்த கேள்வியை கேட்கிறார்.

நான் காலையில் எழுந்த உடனே பாபர் அசாம் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று கேட்டு வருகிறார் என்று ரிஸ்வான் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த பாபர் அசாம், இப்போது எல்லாம் நான் காலையில் எழுந்திருக்கும் போது நான் வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டதாக இணையதளம் மூலம் அறிகிறேன். உடனே ரசிகர்கள் என்னை வாழ்த்துகிறார்கள். திடீரென்று மாலையில் நான் வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டேன் என்று செய்திகள் வருகிறது.

அதற்கும் மக்கள் என்னை வாழ்த்துகிறார்கள். எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. எனவே இதை தவிர வேறு ஏதாவது கேள்வி இருந்தால் கேளு என்று பாபர் அசாம் கூறினார். ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசியது மிகப்பெரிய சர்பரைஸ் ஆக அந்த நாட்டு மக்களுக்கு அமைந்தது. ஆனால் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை இந்தியாவில் யாரும் நடத்துவதில்லை என்று ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர். ஸ்பேஸ் தளத்தில் ரசிகர்களுடன் ஏன் கலந்து பேசக்கூடாது என்று அவர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Story first published: Friday, February 2, 2024, 13:08 [IST]
Other articles published on Feb 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+