Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தயவு செய்து என்னை 'கிங்' என்று அழைக்காதீர்கள்.. நான் இன்னும் அந்த லெவலுக்கு செல்லவில்லை- பாபர் அசாம்

மும்பை : ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் விராட் கோலியை தான் கிரிக்கெட் ரசிகர்கள் கிங் கோலி என்று அழைப்பார்கள். கோலி போல் ஒரு காலத்தில் பாபர் அசாமுன் ரன்களை அடித்து குவித்து வந்தார். இதனால் கோலிக்கு போட்டியாக பாபர் அசாமை, கிங் பாபர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

ஆனால் தற்சமயத்தில் இருவீரர்களும் ரன்களை சேர்க்க தடுமாறி வருகிறார்கள். ஒரு காலத்தில் சதம் சதமாக அடித்து வந்த இந்த இரண்டு ஸ்டார் வீரர்களும் தற்போது சதம் அடிக்க தடுமாறி வருகிறார்கள்.

babar azam Pak vs SA Mohammed rizwan salman agha

இந்த சூழலில் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 353 ரன்கள் வெற்றிகரமாக சேஸ் செய்து சாதனை படைத்தது. இதில் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா 261 ரன்கள் சேர்த்து அசத்தினர். இந்த நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாபர் அசாம்க்கு ஓப்பனிங் வீரராக விளையாடும் படி தேர்வுக்குழு கேட்டுக் கொண்டது.

இந்த போட்டிக்கு பின் செய்தியாளருடன் பேசும் போது, ரசிகர்கள் தம்மை கிங் என்று இனி அழைக்க வேண்டாம். நான் கிங் கிடையாது. இன்னும் அந்த லெவலுக்கு நான் செல்லவில்லை. எனக்கு தற்போது பல புதிய ரோல்கள் தரப்பட்டிருக்கிறது. அதை நான் சரியாக செய்ய வேண்டும் என நினைக்கின்றேன்.

அணி என்ன திட்டம் தீட்டுகிறார்களோ,அதை சரியாக செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றேன். சல்மான் ஆகா மற்றும் ரிஸ்வான் ஆகியோர் பிரமாதமாக விளையாடினார்கள். நான் பாகிஸ்தான் அணிக்காக இதற்கு முன்பு செய்த சாதனைகள் எல்லாம் பழையது. அது முடிந்து விட்டது.

ஒவ்வொரு போட்டியும் எனக்கு கிடைக்கும் புதுசவால்தான். எனவே நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டும் தான் நான் கவனம் செலுத்துவேன் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் பாபர் அசாம் 31 சதம் அடித்திருக்கிறார். இதில் பாபர் அசாம் கடைசியாக சதம் அடித்தது ஆகஸ்ட் 30ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு அதுவும் நேபால் அணிக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 13, 2025, 16:51 [IST]
Other articles published on Feb 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+