Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபில்டிங்கில் கோட்டை விட்டதால் ஆட்டம் போச்சு.. நடுவரிசையில் சரியாக விளையாடனும்.. யார சொல்றாரு பாபர்?

பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 367 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான அணி 45.3 ஓவரில் 35 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Babar azam asks middle order to step up the game in icc world cup 2023

பாகிஸ்தான அணி 50 ஓவர் நின்று பேட்டிங் செய்திருந்தால் கூட இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். மேலும் பில்டிங்கில் பல கேட்ச்களை தவறவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியை தழுவ நேரிட்டது.
இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், முதல் 34 ஓவரில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை.

மேலும் மோசமாக பில்டிங் செய்ததால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை தழுவினோம். வார்னர் போன்ற பேட்ஸ்மேனின் கேச்சை தவறவிட்டால் அவர் நிச்சயமாக அதை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடுவார். ஆனால் என்னுடைய வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏனென்றால் கடைசி 15 ஓவரில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சரியான லெங்தில் பந்து வீசி ஸ்டம்பை குறி வைத்து பவுலர்கள் செயல்பட்டனர். என்னுடைய பேட்ஸ்மன்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் நம்மால் நிச்சயமாக முடியும். இதற்கு முன்பு நம் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரவு நேரத்தில் பந்து நன்றாக பேட்டிற்கு வருகிறது. நாங்கள் சிறிய அளவில் பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். ஆனால் பெரிய அளவில் நடு வரிசையில் பாட்னர்ஷிப் அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.நாம் இன்னும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. பந்துவீச்சிலும் சரி பேட்டிகளும் சரி நாம் முதல் 10 ஓவர்களில் நன்றாக விளையாட வேண்டும் என்று பாபர் அசாம் கூறினார். நடு வரிசையில் பாபர் அசாம் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடி வரும் நிலையில் பாபர் அசாம் யாரை கூறுகிறார் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Story first published: Friday, October 20, 2023, 22:42 [IST]
Other articles published on Oct 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+