Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவதா? இந்திய அணி ரேஞ்ச் என்ன தெரியுமா? ஆஸி. வீரர் சாடல்

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கு பெறும் பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னாள் கேப்டன் பாபர் அசாம், அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த வீரராக பாபர் அசாம் இருந்திருக்கிறார்.

எனினும் பாபர் அசாம், கடந்த 17 இன்னிங்ஸ்களாக ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான அணி வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் இங்கிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 500 ரன்கள் அடித்தும் தோல்வியை தழுவி இருக்கிறது.

pak vs eng babar azam virat kohli

இந்த சூழலில் பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் வீரர் பக்கர் சமான் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதில், விராட் கோலி ஃபார்மில் இல்லாத போது கூட பிசிசிஐ அவரை அணியிலிருந்து நீக்கவில்லை என்று பக்கர் சமான் கூறியிருந்தார். தற்போது பக்கர் சமானின் இந்த கருத்துதான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டது தவறு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹக், பாபர் அசாமும், விராட் கோலியையும் ஒப்பிட்டு பேசியது தவறு.விராட் கோலி ஃபார்ம் அவுட் ஆனபோதும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற இரண்டாவது அணி என்ற பெயரை பெற்றிருந்தது.

ஆனால் பாபர் அசாம் தற்போது பார்மில் இல்லாத போது அதிக தோல்விகளை தழுவும் இரண்டாவது அணி என்ற சோகமான சாதனையை பாகிஸ்தான் படைத்திருக்கிறது. இதனால் பாபர் அசாமை நீக்கி இருப்பது சரியான முடிவு தான். கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இருக்கிறது என்று பிராட் ஹாக் கூறி இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகின் ஆப்ரிடி, பாபர் அசாம், மீண்டும் ஃபார்ம் உடன் அணிக்கு வருவார் என்று தம் நம்புவதாக தெரிவித்துள்ளார். பாபர் அசாம், நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி போன்ற வீரர்களுக்கு இந்த ஓய்வு தேவை என்றும் இந்த ஓய்வு அவர்கள் மனதளவில் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ள ஆப்ரிடி, இதன் மூலம் இந்த மூன்று வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, October 14, 2024, 19:39 [IST]
Other articles published on Oct 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+