Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாபர் அசாம் சாதனை.. இங்கி. தொடரில் கடைசி இன்னிங்சில் அபார ஆட்டம்

எட்ஜ்பாஸ்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் கேப்டனாக புதிய மைல்கல்லை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸின் போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கேப்டனாக 2000 ரன்கள் என்ற சாதனையை அவர் கடந்தார்.

இதன் மூலம் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது ஆசிய கேப்டன் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.பாபர் அசாம் இந்த இலக்கை எட்ட வெறும் 41 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் அதிவேகமாக இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இப்பட்டியலில் ஜோ ரூட் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் தலா 40 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

Babar azam

ஆல்-ரவுண்டராக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இந்த இலக்கை எட்ட 61 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். அவர் 66 இன்னிங்ஸ்களில் விளையாடி 3060 ரன்கள் குவித்துள்ளார்.

26 வயது பவுலரிடம் கிளீன் போல்ட் ஆன சுப்மன் கில்.. தெறித்து சிதறிய ஸ்டம்புகள்

26 வயது பவுலரிடம் கிளீன் போல்ட் ஆன சுப்மன் கில்.. தெறித்து சிதறிய ஸ்டம்புகள்

இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 71 இன்னிங்ஸ்களில் 2182 ரன்களுடனும், இலங்கையின் திமுத் கருணாரத்ன 45 இன்னிங்ஸ்களில் 2160 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பாகிஸ்தானின் பாபர் அசாம் 41 இன்னிங்ஸ்களில் 2003 ரன்கள் எடுத்து நான்காவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் கிரெய்க் பிராத்வெய்ட் 64 இன்னிங்ஸ்களில் 1994 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, கேப்டனாக விராட் கோலி 37 இன்னிங்ஸ்களில் 1349 ரன்களும், ரோஹித் சர்மா 42 இன்னிங்ஸ்களில் 1254 ரன்களும் குவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நியூசிலாந்தின் டாம் லாதாம் 37 இன்னிங்ஸ்களில் 1338 ரன்களும், இலங்கையின் தனஞ்சய டி சில்வா 31 இன்னிங்ஸ்களில் 1130 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்திய ஏஜெண்டை பாகிஸ்தான் பயிற்சியாளராக நியமனம் செய்வதா? எப்படி விஸ்வாசம் இருக்கும்- லத்தீப் கேள்வி

Also Read

இந்திய ஏஜெண்டை பாகிஸ்தான் பயிற்சியாளராக நியமனம் செய்வதா? எப்படி விஸ்வாசம் இருக்கும்- லத்தீப் கேள்வி

பங்களாதேஷ் அணியின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 30 இன்னிங்ஸ்களில் 1130 ரன்கள் குவித்து இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இங்கிலாந்துக்கு எமிரான 3வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் பாபர் அசாம் அபாரமாக விளையாடினார். 103 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும்.

Story first published: Friday, September 11, 2026, 20:57 [IST]
Other articles published on Sep 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+