
பாபர் அசாம் சதம்
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணம் பாபர் அசாம் தான். 107 பந்துகளை சந்தித்த பாபர் ( 103 ரன்கள் ) அட்டகாசமான சதத்தை விளாசினார். இது பாபரின் ஹாட்ரிக் சதமாகும்.

2 முறை ஹாட்ரிக் சதம்
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 ஹாட்ரிக் சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார்.கடந்த 2026ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 சதங்கள் அடித்தார். தற்போது ஆஸ்திரேலியாவுடனான தொடரில் 2 சதங்களும், அதனை தொடர்ந்து வந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரு சதமும் அடித்து 2 ஹாட்ரிக்குகளை தனதாக்கியுள்ளார்.

கோலி சாதனை தகர்ப்பு
இதில் முக்கிய சாதனையும் தகர்க்கப்பட்டுள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையை கோலி வைத்திருந்தார். அவர் 17 இன்னிங்ஸ்களில் அடித்திருந்தார். ஆனால் பாபர் அசாம் வெறும் 13 இன்னிங்ஸ்களிலேயே அந்த சாதனையை தகர்த்துள்ளார்.
Recommended Video

கோலியின் சாதனைக்கு ஆபத்து
தற்போது வரை விராட் கோலி 260 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43 முறை சதங்களை விளாசியுள்ளார். பாபர் அசாம் இதுவரை 86 போட்டிகளில் விளையாடி 17 சதங்களை அடித்துவிட்டார். கோலியின் 50 ஓவர் சராசரி 58.07 ஆகும். பாபர் அசாம் 59.78 ரன்களை வைத்துள்ளார். இதன்மூலம் விராட் கோலியின் சாதனைகளை வெகு சீக்கிரமாகவே பாபர் அசாம் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











