Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி சாதனையை உடைத்த பாபர் அசாம்.. ரோகித் சர்மா ரெக்கார்டையும் விட்டு வைக்கல.. விவரம் இதோ

கிறிஸ்ட்சர்ச் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரே நாளில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிக்க, விராட் கோலியின் சாதனையை தற்போது பாபர் அசாம் உடைத்து வருகிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் கடைசி கட்டத்தில் பாபர் அசாம் இன்று அரை சதம் விளாசினார்.

பாபர் அசாம் சாதனை

பாபர் அசாம் சாதனை

பாபர் அசாம் 40 பந்துகள் எதிர்கொண்டு 55 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த ஆசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனை பாபர் அசாம் முறியடித்தார். விராட் கோலி இந்த மைல்கல்லை 261 இன்னிங்சில் எட்டினார்.

29வது அரைசதம்

29வது அரைசதம்

கவாஸ்கர் 262 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டினார். இதேபோன்று ஜாவித் மியாண்டட் 266 இன்னிங்ஸை எடுத்துக் கொண்டார். ஆனால் பாபர் அசாம் தற்போது 251 இன்னிங்சில் இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்திருக்கிறார். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் அடித்த 29 ஆவது அரை சதம் இதுவாகும்.

2வது இடம்

2வது இடம்

இதன் மூலம் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.ரோகித் சர்மா 28 அரை சதங்கள் அடித்திருக்கிறார்.இந்த பட்டியலில் விராட் கோலி 33 அரை சதம் அடித்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த நிலையில், பாபர் ஆசாமின் ஸ்ட்ரைக் ரேட் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் குறை

பாகிஸ்தான் குறை

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் தவிர வேறு எந்த வீரர்களும் ரன்களை அடிப்பதில்லை. பாகிஸ்தான் பேட்டிங்கை இருவருமே தாங்கிக் கொண்டு வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் ரசிகர்களும் இவ்விரு வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.டி20 உலக கோப்பையில் இவ்விருவரும் நம்பியே பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் இருப்பது மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, October 13, 2022, 18:40 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+