Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“டம்மி கேப்டனாகி விட்டீர்கள்.. பாதி டீமை வீட்டுக்கு அனுப்பும்போது..”.. பாபர் அசாம் மீது விமர்சனம்

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது உள்ளிட்ட 2 பயிற்சியாளர்கள் மற்றும் 7 வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி - PCB) திடீரென நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தனது அணி வீரர்களுக்காகவும், பயிற்சியாளர்களுக்காகவும் குரல் கொடுக்காத கேப்டன் பாபர் அசாமை, 'டம்மி கேப்டன்' என்று முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட 7 வீரர்களையும், தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகிய இருவரையும் உடனடியாக பாகிஸ்தானுக்கு திரும்புமாறு பிசிபி உத்தரவிட்டது.

Babar Azam called as Dummy Captain Rashid Latif Slams Skipper Over Sacking of Coach Sarfaraz Ahmed


இது குறித்து யூடியூப் பக்கத்தில் பேசிய ரஷித் லத்தீப், "பாபர் அசாம் உடனடியாக தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். பாதி அணி திருப்பி அனுப்பப்படும் போது, நீங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? நீங்கள் ஒரு டம்மி கேப்டனாக மாறிவிட்டீர்கள். தலைவன் என்பதற்கும், கேப்டன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

7 வீரர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த உங்களது பயிற்சியாளரையும், உமர் குல்லையும் பிசிபி நீக்கியுள்ளது. ஆனால், நீங்கள் தட்டிக் கேட்காமல் அமைதியாக இருக்கிறீர்கள். பிசிபி-க்கு எப்போதும் ஒரு டம்மி கேப்டன் தான் தேவைப்படுகிறது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது" என்று கொந்தளித்தார்.

இந்த தொடரில் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத பாபர் அசாம், 2-வது டெஸ்டில் களம் இறங்கி 8 மற்றும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பாகிஸ்தான் அணி இரண்டாவது போட்டியில் தோற்க அவரும் ஒரு முக்கிய காரணம் ஆவார்.

“சோசியல் மீடியாவில் மட்டுமே நீ சிறந்த வீரன்”.. பாகிஸ்தான் கிங் பாபர் அசாமை வறுத்தெடுத்த பாசித் அலி

“சோசியல் மீடியாவில் மட்டுமே நீ சிறந்த வீரன்”.. பாகிஸ்தான் கிங் பாபர் அசாமை வறுத்தெடுத்த பாசித் அலி

தற்போது மீதமுள்ள பாகிஸ்தான் வீரர்களை வைத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியை சந்திக்க இருக்கிறார் அந்த அணியின் ஒருநாள் மற்றும் டி20 பயிற்சியாளர் மைக் ஹெசன். இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பல பயிற்சியாளர்கள், தேர்வுக் குழுவினர், கேப்டன்களை மாற்றி விட்டது பாகிஸ்தான் அணி. ஆனாலும், வெற்றிகள் மட்டும் கிடைக்கவே இல்லை.

வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு முற்றுப்புள்ளி.. ஓடிப்போய் பாய்ந்து கேட்ச் பிடித்த ரஜத் படிதார்!

Also Read

வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு முற்றுப்புள்ளி.. ஓடிப்போய் பாய்ந்து கேட்ச் பிடித்த ரஜத் படிதார்!
Story first published: Tuesday, September 1, 2026, 16:58 [IST]
Other articles published on Sep 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+